For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருட்டுத்தனம்.. இந்திய எல்லையில் படைகளை இறக்கியது எப்படி.. சீனாவின் வார் கேம்.. அம்பலம் ஆன விஷயம்!

இந்திய எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது எப்படி என்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

லடாக்: இந்திய எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது எப்படி என்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது. சீனா திருட்டுத்தனமாக அங்கு படைகளை குவித்து வருகிறது.

இந்தியாவின் பகுதியான லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில்தான் சீனா அதிக அளவில் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

அதேபோல் லடாக் அருகே இதுவரை பிரச்சனையே ஏற்படாத பகுதிகளில் எல்லாம் சீனா படைகளை குவித்து வருகிறது. முக்கியமாக லடாக் எல்லையில் மொத்தம் நான்கு இடங்களில் சீனா படைகளை குவித்து வருகிறது.

பெரிய ஆபத்து வரப்போகிறது.. சீனா - இந்தியா சண்டை பற்றி முதல்முறை மௌனம் கலைத்த பாக்.. என்ன சொன்னது?பெரிய ஆபத்து வரப்போகிறது.. சீனா - இந்தியா சண்டை பற்றி முதல்முறை மௌனம் கலைத்த பாக்.. என்ன சொன்னது?

எங்கு எல்லாம்

எங்கு எல்லாம்

சீனா மொத்தமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. இந்த நான்கு இடங்களும் லடாக் மற்றும் சிக்கும் கீழேதான் வருகிறது. இங்குதான் தற்போது சீனா படைகளை குவித்து வருகிறது. இங்கு பாதுகாப்பு செய்வதும் மிகவும் கடினம். இந்த பகுதிகள் மூலம் சீனா மிக எளிதாக இந்தியாவிற்குள் ஊடுருவ முடியும் என்கிறார்கள்.

எப்படி வருகிறது

எப்படி வருகிறது

இந்த இடங்களில் சீனா இந்திய ராணுவத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அங்கு அதிக படைகளை குவித்து உள்ளது. ஒரே நாளில் எதிர்பார்க்காத வகையில் அங்கு சீனா படைகளை குவித்து உள்ளது. சீனா அங்கு எப்படி இத்தனை படைகளை குவித்தது, எப்படி ஒரே நாளில் பல வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டார்கள் என்று முதலில் கேள்வி எழுந்தது. இது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

வெளியான விவரம்

வெளியான விவரம்

அதன்படி சீனா அங்கு கட்டுமானத்திற்கு வைத்து இருந்த டிரெக் மூலம் படை வீரர்களை குவித்துள்ளது. பாங்காங் டிசோவிற்கு அருகே இருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனாவின் விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ராணுவத்தின் பெரிய பெரிய டிரெக் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது மணல் சிமெண்ட் கொண்டு வருவதற்கான டிரெக் ஆகும். இதில்தான் அவர்கள் ராணுவ வீரர்களை அழைத்து வந்துள்ளனர்.

ஏன் இப்படி செய்கிறார்கள்

ஏன் இப்படி செய்கிறார்கள்

அதாவது கட்டுமானத்திற்கு இருக்கும் வாகனத்தை அப்படியே மொத்தமாக எல்லைக்கு வீரர்களை கொண்டு செல்லும் வாகனமாக மாற்றியுள்ளனர். இது மேலே மூடப்பட்டு இருக்கும். இதனால் உள்ளே வீரர்கள் இருப்பது கண்டுபிடிக்க முடியாது. இதனால்தான் இந்திய சாட்டிலைட்களில் இருந்து தப்பித்து, சீனா வீரர்கள் வேகமாக எல்லைக்குள் குவிக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரத்தில் இப்படி வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வார் கேம்

வார் கேம்

சீனாவின் ராணுவ விதிகளில் இது ஒன்றாகும். அதாவது எல்லையில் எதிரி நாட்டுக்கு தெரியாமல் வேகமாக படைகளை குவிப்பது சீனாவின் ராணுவ விதிகளில் ஒன்றாகும். இதை சீனா வார் கேம் என்று அழைக்கிறது. எப்படியாவது வீரர்களை எல்லையில் அதிகம் குவிக்க வேண்டும். எதிரி நாட்டை விட அதிகம் குவிக்க வேண்டும் என்பதுதான் இதன் விதி. அதன்படியே சீனா செயல்பட்டுள்ளது.

அதிக வீரர்கள்

அதிக வீரர்கள்

இப்படி வீரர்களை அதிகம் குவிக்க காரணம். எல்லையில் இந்தியா சீனா இடையே சண்டை வந்தால், அதில் பீரங்கிகளை விட வீரர்கள் நடத்தும் துப்பாக்கி சூடுதான் அதிக கவனம் பெறும் என்கிறார்கள். அதாவது அதிக வீரர்களை களமிறக்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் துப்பாக்கி சூடுதான் இதில் முக்கியத்துவம் பெறும். அதைதான் தற்போது சீனா செய்து வருகிறது. சீனா நமது எல்லைக்கு அருகே திருட்டுத்தனமாக வந்துள்ளது என்கிறார்கள்.

English summary
How China transported so many troops in Ladakh so fast: The war game against India is on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X