For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி வழக்கில் வெற்றி கிடைத்தது எப்படி... வழக்கறிஞர்கள் வாதாடியது என்ன தெரியுமா?

2ஜி வழக்கில் ஆ. ராசா மற்றும் கனிமொழி குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வந்ததற்கு பின்பு பல முக்கிய வாதங்கள் காரணமாக இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    2ஜி வழக்கில் வழக்கறிஞர்கள் என்ன வாதாடினார்கள் ? எப்படி தீர்ப்பு கிடைத்தது ?- வீடியோ

    டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை குற்றமற்றவர்கள் என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிடடுள்ளார். இந்த தீர்ப்புக்கு பின் பல முக்கிய நீதிமன்ற வாதங்கள் காரணமாக இருக்கிறது.

    குற்றச்சாட்டப்பட்ட ஆ. ராசா செய்த வாதம் இதில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வழக்கு குறித்து புத்தகம் எழுதிக் கொண்டு இருக்கும் ராசா, நீதிமன்றத்தில் பல முறை முக்கியமான வாதங்களை முன்வைத்தவர்.

    அதேபோல் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுரா செய்த வாதமும் இந்த வழக்கில் மிக முக்கியமாக பாரக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஊழல் என்று பெயர் பெற்ற 2ஜி வழக்கு ஒன்றுமில்லாமல் போனதற்கு பின்பு இவர்களின் வாதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    ராசா வாதம்

    ராசா வாதம்

    இந்த வழக்கில் ஆ.ராசா தொடர்ச்சியாக, 2ஜி மக்களில் நலனுக்காக கொண்டு வரப்பட்டது என்று வாதாடி வந்தார். நிறைய சிறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதனால் வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக தொலைபேசி கட்டணம் வெகுவாக குறைந்தது என்று கூறினார். மேலும் இதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இந்த ஏலம் நடந்தது என்று வாதம் வைத்தார். மிக முக்கியமாக சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியால் பெரிய நிறுவனங்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டை உருவாக்கி இருக்கிறது என்று வாதம் வைத்தார்.

    கனிமொழி தரப்பு

    கனிமொழி தரப்பு

    இந்த வழக்கில் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் 200 கோடி வந்ததாக கனிமொழி குற்றச்சாட்டப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து வாதிட்ட கனிமொழி தரப்பு, கனிமொழிக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஜூன் 20, 2007க்குப் பின் எந் சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டனர். வெறும் 14 நாட்கள் மட்டுமே கலைஞர் தொலைக்காட்சியில் இருந்ததாக கனிமொழி தரப்பு வாதம் வைத்தது. ஆனாலும் அந்த 200 கோடி பண பரிமாற்றத்திற்கும் சிபிஐ தரப்பு சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தொலைத் தொடர்பு செயலாளர்

    தொலைத் தொடர்பு செயலாளர்

    தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுராவின் வாதம் ராசாவின் வாதத்திற்கு அடுத்தபடியாக மிக முக்கியமான வாதமாக இதில் பார்க்கப்படுகிறது. இதில் இவர் ''முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே ஏலம் விடப்பட்டது. இதில் எந்தவிதமான லாபமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு துறையில் 2ஜி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய நிறுவனங்களின் வரவால் மக்கள் நல்ல பயன்அடைந்தார்கள்'' என்று வாதம் செய்தார்.

    அணில் அம்பானி

    அணில் அம்பானி

    ஸ்வான் நிறுவனம் மூலம் 990 கோடி முறைகேடு செய்து போலியாக 2ஜி உரிமம் பெற்றதாக அணில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வாதத்தில் பேசிய அம்பானி தரப்பு ''ஸ்வான் நிறுவனம் இதுபோன்ற எந்த விதமான முறைகேடும் செய்யவில்லை. 2ஜி உரிமம் பெற்ற டைகர் டிரேடர்ஸ், ஸெப்ரா கன்சல்டன்ஸ், பாராட் கன்சல்டன்ஸ் நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.'' என்று வாதிட்டு இருந்தது. மேலும் இதற்கான உரிய ஆவணங்களையும் அவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது.

    யூனிடெக் நிறுவன தலைவர்

    யூனிடெக் நிறுவன தலைவர்

    யூனிடெக் நிறுவன தலைவர் சஞ்சய் சந்திராவின் வாதம் ஆ.ராசாவின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இருந்தது. அதில் ''புதிய நிறுவனங்களின் வருகை பெரிய நிறுவனங்களுக்கு பிடிக்கவில்லை. கட்டணம் குறைந்ததும் அவர்களுக்கு தொல்லையாக இருந்தது. அதன்காரணமாகவே இந்த புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.'' என்று வாதம் செய்து இருந்தனர்.

    English summary
    Defence Lawyers side played main role in 2G case verdict. Importantly Sanjay Chandra’s, R. Rasa, Swan Telecom, Kanimozhi defence did a main role in this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X