For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது எப்படி இருக்கு? இந்திய வங்கிகளில் 'தாதா' தாவூத் இப்ராஹிமின் ரூ 5,900 கோடி பணம் பாய்ந்த கதை...

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய வங்கிகளில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ரூ5,900 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

How did Dawood park Rs 5,900 crore in Indian banks?

வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கருப்புப் பணத்தைக் கொண்டுவருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் மத்திய உளவுத்துறை, ரா அமைப்பு ஆகியவற்றுடன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் 1600 வங்கி கிளைகள் மூலமாக ரூ.5,900 கோடி பணத்தை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான அதிர வைக்கும் தகவல்கள்:

  • நாடு முழுவதும் 1600 வங்கி கிளைகளில் தாவூத் இப்ராஹிமின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இவற்றில் 900 கிளைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுடையதாகும்.
  • சட்டவிரோத சுரங்கங்கள், போதைப் பொருள், ஆயுதக் கடத்தல் மற்றும் லாட்டரி முறைகேடுகள் மூலம் இந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது.
  • எந்த ஒரு ஏஜெண்ட்டும் தம்முடைய சொந்தப் பெயரில் அக்கவுண்ட்டை தொடங்கவும் இல்லை.. யாருக்கெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அவர்கள் பெயரில் இந்த பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.
  • இப்படி தொடங்கப்படும் அக்கவுண்ட்டுகளில் இருந்து ரூ1 லட்சம் பணம் பரிமாற்றம் செய்தால் ஒரிஜனல் அக்கவுண்ட்தாரருக்கு ரூ5 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுவிடும்.
  • ஏஜெண்ட்டுகள் வசமே ஏ.டி.எம். கார்டுகள் ஒப்படைக்கப்பட்டு விடுமாம்.
  • அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட ஏஜெண்டுகள்தான் இத்தகைய பண பரிமாற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
  • இத்தகைய பண பரிமாற்றத்துக்கு நாடு முழுவதும் சுமார் 300 ஏஜெண்டுகள் இயங்கி வருகின்றனர்.. இவர்கள் ஏராளமான வங்கி அக்கவுண்ட்டுகளைத் தொடங்கியிருக்கின்றனர்.
  • கடந்த 5 ஆண்டுகளில் இத்தகைய நிழல் உலக தாதாக்களின் ஏஜெண்டுகள் தொடங்கிய சுமார் 1000 வங்கி அக்கவுண்ட் நம்பர்கள் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.
  • இப்படி கண்டுபிடிக்கப்பட்ட அக்கவுண்டுகள் பெரும்பாலும் தாவூத் வகையறாக்களுடன் தொடர்புடையதாம்...
  • கிராமப்புற வங்கிக் கிளைகளில் அதிக அளவு கெடுபிடி இருக்காது என்பதால் அவைகள் தான் இந்த ஏஜெண்டுகளின் இலக்காம்.
  • லாட்டரி முறைகேடுகள் மூலம்தான் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதாம்.. போலி லாட்டரி டிக்கெட்டுகளை புழக்கத்தில்விட்டுதான் பணத்தை அள்ளுகின்றனராம்.
  • மற்றொரு வகை. நீங்கள் ரூ 1000 டெபாசிட் செய்தால் உங்களுக்கு ரூ10 ஆயிரம் உறுதி என்று நம்பிக்கை அளிக்கப்படுகிறது. தொடக்கத்தில் சில முறை சொன்னதொகையைக் கொடுத்து பெரும் எண்ணிக்கையிலான தொகையை டெபாசிட் செய்ய வைத்து விழுங்கி விடுவது மற்றொரு வகையாம்
  • மேற்கு வங்கம், கேரளா, குஜராத், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் இத்தகைய லாட்டரி மோசடி வெகுஜோராக நடக்கிறது.
English summary
In the fight against black money there are always two sides to it. The one we know and the other we do not. While the Indian government continues with its process of bringing back the black money from various foreign accounts, there is another problem that is daunting the Indian security agencies and there appears to be no end to it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X