For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாராஷ்டிரா கலவரத்திற்கு காரணமான பேஸ்புக் போஸ்டுகள்.. ஒரு வாரமாக போடப்பட்ட மாஸ்டர் பிளான்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஜாதி கலவரத்திற்கு பேஸ்புக் பக்கம் ஒன்று முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    புனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி- வீடியோ

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புனே மற்றும் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக மோசமாக கலவரம் நடந்தது. தற்போது இந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கலவரத்திற்கு எதிராக தற்போது தலித் அமைப்புகள் பந்த் நடத்தி வருகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

    இந்த பந்திற்கு 250க்கும் அதிகமான இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு நடந்த கலவரத்திற்கு பேஸ்புக் பக்கம் ஒன்றும் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒருவாரம் முன்பே

    ஒருவாரம் முன்பே

    200ம் ஆண்டு பீமா கோரேகான் போர் நினைவு தினம் தலித் அமைப்பினரால் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நினைவு தினத்திற்கு ஒருவாரம் முன்பே இதுகுறித்த தவறான தகவல்கள் பரபரப்பட்டு இருக்கிறது. இதற்காக பேஸ்புக்கில் இருக்கும் 'இதிகாச பால்குடா' ( வரலாற்று வழிகாட்டி ) என்ற பக்கம் ஒருவாரமாக நிறைய போஸ்டுகள் போட்டு இருக்கிறது.

    என்ன போஸ்டுகள்

    என்ன போஸ்டுகள்

    இதில் எல்லா போஸ்டுகள் தலித் அமைப்புகளுக்கு எதிரானதாக இருந்துள்ளது. மாராத்தா என்ற ஜாதியின் தோல்வியை தலித் சாதியினர் கொண்டாட இருக்கிறார்கள். இது மாராத்தா இனத்திற்கு அவமானம் என்றெல்லாம் இந்த போஸ்ட்களில் வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் சில போஸ்டுகளில் வெளிப்படையாகவே பிரச்னையை தூண்டிவிட்டு இருக்கிறார்கள்.

    சண்டை அப்போதும்

    சண்டை அப்போதும்

    மேலும் கலவரம் நடந்த நாட்களிலும் கூட இவர்கள் மோசமாக நிறைய வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள். நிறைய பேர் கொல்லப்பட்டதாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். இதனால் மகாராஷ்டிராவில் பெரிய அளவில் பதற்றம் உருவாகி இருக்கிறது. வராலற்றுக்கும் இவர்களுக்கும் எந்த விதமான புரிதலும் இல்லை என்று தற்போது கூறப்பட்டுள்ளது.

    உண்மை எது

    உண்மை எது

    200 வருடங்களுக்கு முன்பு நடந்த போரில் மராத்தா இனம் தலித்துகளிடம் தோற்றுப் போனதாக இந்த விழா கொண்டப்படுகிறது என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இது பிரிட்டிஷ் இனத்திற்கும், மற்றொரு மக்கள் குழுவிற்கும் இந்த போர் நடந்தது. இதில் பிரிட்டிஷ் குழுவில் தலித்துகள் இருந்துள்ளனர். மேலும் மாராத்தா குழுவும் பிரிட்டிஷ் அணிக்கு நட்பாகவே இருந்து உள்ளனர். இதனால் தலித்துக்கள் மராத்தா மக்களின் தோல்வியை கொண்டாடவில்லை என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

    English summary
    The whole Maharashtra state has affected by riot that took place yesterday in Mumbai. This riot has initially created in Pune after the death of a Dalit man in small riot. Hindu groups say that Dalit created problem, while Dalit groups say Hindu groups are everything behind the problem. Now a Facebook page has accused for creating riot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X