For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: பீகார், ஜார்க்கண்ட்டில் வாலை சுருட்டிக் கொண்ட மாவோயிஸ்டுகள்

Google Oneindia Tamil News

பாட்னா/ராஞ்சி: தேர்தல்களின் போது வன்முறைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் இம்முறை பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்பது ஆறுதலைத் தருகிறது.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் ஜார்க்கண்ட், பீகாரும் முக்கியமானவை. பீகாரின் 38 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் கை ஓங்கிருப்பது 26-ல். கடந்த 5 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளின் வன்முறை இங்கே கணிசமாக குறைந்திருக்கிறது.

How Jharkhand and Bihar are battling Naxalism

முதல் கட்ட வாக்குப் பதிவில் பீகாரின் கயா, அவுரங்காபாத், நவடா மற்ரும் ஜாமுய் ஆகிய மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட இடங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் எந்த ஒரு வன்முறையும் இல்லாமல் இங்கு சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தனைக்கும் மாவோயிஸ்டுகளால் கயா, ஜெகனாபாத், அவுரங்காபாத், போஜ்பூர் ஆகியவை பல ஆண்டுகளாக பெருந்துயரத்தை அனுபவித்தவை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 29-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற பாலமு, லோஹர்டாகா மற்றும் சத்ரா ஆகியவை மாவோயிஸ்டுகளின் வன்முறைகளால் ரத்த பூமியாக சிவந்தவை. இம்முறை மாவோயிஸ்டுகள் எந்த வன்முறையும் நடத்தவில்லை. இதனால் அங்கும் சுமூகமாக தேர்தல் நடைபெற்றது.

நீங்க காலாவதி ஆயிட்டீங்க.. உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.. மமதா பானர்ஜி அதிரடி நீங்க காலாவதி ஆயிட்டீங்க.. உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.. மமதா பானர்ஜி அதிரடி

மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் அரசு நிதி உதவி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மிகப் பெரிய அளவில் உதவி இருக்கிறது. அதேபோல் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீரமுடன் வேட்டையாடி வருவதும் அவர்கள் வாலை சுருட்ட பிரதான காரணம் என கூறப்படுகிறது.

English summary
The Loksabha elections had so far been relatively peaceful in Bihar and Jharkhand which was badly affected by Maoists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X