For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள், தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Recommended Video

    Kerala விமான விபத்து நடந்தது எப்படி? பரப்பு பின்னணி

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

    துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த விமானம் கோழிக்கோட்டில் இருக்கும் கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளது. இந்த விமான விபத்து மாலை 7.40 மணிக்கு நடந்துள்ளது.

    கோழிக்கோடு.. 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் சிக்கி.. இரண்டாக உடைந்தது.. விமானி பலி கோழிக்கோடு.. 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் சிக்கி.. இரண்டாக உடைந்தது.. விமானி பலி

    நிலை என்ன

    நிலை என்ன

    இந்த விமானத்தில் 184 பேர் இருந்துள்ளனர். இதில் 10 குழந்தைகள் இருந்தனர். மொத்தமாக 6 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். 2 பைலட்கள் இருந்துள்ளனர். இதில் விமானத்தின் முன் பாகம் அப்படியே உடைந்து போனதால், விமானிகள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. மற்ற பயணிகளின் நிலை தெரியவில்லை.

    எப்படி வந்தது

    எப்படி வந்தது

    இந்த விமானம், ஓடு பாதையில் சறுக்கில் கீழே விழுந்து, மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழைதான் இதற்கு காரணம் ஆகும். ஓடு பாதை மிக அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் கீழே இறங்கியது விமானம் சறுக்கி உள்ளது. அதேபோல் இந்த விமான நிலையம் மலை மீது இருக்கும் சிறிய ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும் .

    தெரியவில்லை

    தெரியவில்லை

    இந்த விமானத்தை இறக்கும் முன்பே அங்கு மழை காரணமாக சரியாக எதுவும் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது ஓடுபாதை மொத்தமாக மங்கலாக இருந்துள்ளது. 2 கிமீ தூரத்திற்கு குறைவாகவே தெரிந்துள்ளது. இதுதான் விமானிகள் சரியாக விமானத்தை இறக்க முடியாமல் போனதற்கு காரணம் என்கிறார்கள்.

    மழை பெய்தது

    மழை பெய்தது

    அதேபோல் விமானத்தை இறக்கிய சமயத்திலும் அங்கு மிக மோசாமான் மழை பெய்து கொண்டு இருந்தது. ஓடு பாதை 10ல் விமானத்தை இறக்கும் போது விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி சென்று, கீழே விழுந்து இரண்டாக பிளந்து இருக்கிறது. மொத்தம் 300 மீட்டர்கள் இந்த விமானம் சறுக்கி சென்று அதன்பின் இரண்டாக பிளந்து இருக்கிறது.

    மிக கஷ்டம்

    மிக கஷ்டம்

    இதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்த விமானம் இரண்டாக பிளந்த பின்பும் அங்கு இன்னும் மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகளை செய்வது கஷ்டமாகி உள்ளது. அதேபோல் அங்கு இதனால் பலி எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    How Kozhikodi air india flight accident happened? all you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X