For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதி படம் மாதிரியே மங்களூரில் திக்..திக்.. உள்ளே போலீஸ்..வெளியே ஆயுதங்களுடன் 5000 பேர்.. ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

மங்களூர்: சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில், வில்லன் கும்பல் ஒரு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த முயற்சிப்பது கதை கருவாக இருக்கும்.

பிற பகுதியிலிருந்து போலீசார் வர முடியாத சூழ்நிலை.. காவல்நிலையத்திற்குள் ஒரு போலீஸ்காரர் சிக்கிக் கொண்டு, கூட இருக்கும் சிலர் உயிரையும் காப்பாற்ற எடுக்கும் திக் திக் முயற்சிகள்தான், இந்த படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது.

கிட்டத்தட்ட மங்களூரிலும் இதே மாதிரிதான் இப்போ ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதைவிட அதிக ஆபத்தான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடந்த 19ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறை பாதைக்குத் திரும்பியது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்


போராட்டத்தின்போது வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுக்க கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மங்களூரிலுள்ள, 'பந்தர்' பகுதி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வன்முறையாளர்கள் முயன்றதாகவும், அதை தடுக்கத்தான், துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் காவல் துறை விளக்கம் அளித்தது.
இருப்பினும், காவல்துறைக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் போலீசார் தற்போது வன்முறை நிகழ்ந்த நாளில் மங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர்.

ஊடக செய்தி

ஊடக செய்தி


இது தொடர்பாக இந்தியா டுடே என்ற ஊடகம் ஒரு ஆய்வை மேற்கொண்டு உள்ளது. கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் பார்த்தால் காவல்துறைக்கு எதிராக திட்டமிட்டு இந்த வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
அது பற்றிய ஷாக் தகவல் இதுதான்: சிசிடிவி வீடியோக்கள் அடிப்படையில் பார்த்தால், மங்களூரு நகரில் உள்ள ராவ்&ராவ் சர்க்கிள் என்ற பகுதியில் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே மிகப்பெரிய போராட்ட குழு ஒன்று கூடியுள்ளது. இதையடுத்து அவர்கள் பந்தர் காவல் நிலையத்தை நோக்கி நகரத் தொடங்கி உள்ளனர்.

வேனில் வந்த கற்குவியல்

வேனில் வந்த கற்குவியல்

காவல் நிலையத்திற்கு செல்ல கூடிய அனைத்து சாலைகளையும் அடைக்கும் வகையில், திட்டமிட்டு, போராட்டக்காரர்கள் குழுமி நின்று கொண்டுள்ளனர். இதன்பிறகு டெம்போ ஒன்று அங்கு வருகிறது. அதற்குள் இருந்து மூட்டை மூட்டையாக கீழே ஏதோ இறக்கி வைக்கப்படுகிறது. அந்த மூட்டையைத் திறந்து பார்த்தால் உள்ளே ஏகப்பட்ட கல் குவியல்கள் இருக்கின்றன. அந்த கற்களை எடுத்து போலீசார் மீது, போராட்டக்காரர்கள் சரமாரியாக வீசத் தொடங்குகிறார்கள்.

பின் வாங்கிய போலீஸ்

பின் வாங்கிய போலீஸ்

மதியம் 2 மணிக்கு மேல்தான் போராட்டம், இப்படி, வன்முறை பாதைக்கு திரும்புகிறது. காவல்துறையினர் மீது கற்களை வீசியவர்கள், முன் ஜாக்கிரதையாக தங்களது முகம் தெரியாத அளவுக்கு துணியால் வாயோடு சேர்த்து கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காவல்துறையினர் ஒரு பேருந்தில் அங்கே வருகை தந்தனர். ஆனால், இரும்பு கம்பிகளை கொண்டும், கற்களை கொண்டும் பஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதையடுத்து அந்த பேருந்து பின்வாங்குகிறது.

காவல் நிலையத்தை நெருங்கிய கும்பல்

காவல் நிலையத்தை நெருங்கிய கும்பல்

இதையடுத்து சாலையில் யாரும் செல்ல முடியாதபடி இரும்புக் கம்பிகளை போட்டு தடைகளை ஏற்படுத்துகிறது அந்த கும்பல். அதில் சிலர் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை வேண்டும் என்றே அடித்து உடைக்கிறார்கள்.. அல்லது வேறு பக்கமாக திருப்பி வைக்கிறார்கள்.
சாலையோரம் உள்ள கேமராக்களை மட்டுமின்றி சிலர் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து, அங்கே வாசல்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை வேறு பக்கமாக திருப்பி வைக்கிறார்கள். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மாலை 4.30 மணியிலிருந்து 4 45 மணிக்குள், வன்முறை கும்பல், பந்தர் காவல் நிலையத்தின் அருகே வந்துவிடுகிறது. காவல் நிலையத்துக்கு அருகே வந்ததும், கல்வீச்சின் வேகம் இன்னும் அதிகரிக்கிறது. பழைய பொருட்கள் மற்றும் டயர்களை சாலைகளில் போட்டு அந்த கும்பல் தீ வைக்கிறது.

துப்பாக்கி கடை

துப்பாக்கி கடை

ஒரு பக்கம், பந்தர் காவல் நிலையத்திற்கு செல்ல கூடிய அனைத்து சாலைகளையும், இவ்வாறு இரும்பு பொருட்களை போட்டு தீ வைத்தும், தடைகளை ஏற்படுத்தியும் வன்முறைக் கும்பல் போலீஸ் ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டு இருந்தது. பந்தர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறமாக ஒரு துப்பாக்கி விற்கக்கூடிய ஷாப் செயல்படுகிறது. வன்முறைகளால் அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது. ஆனால், அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று குண்டுகளையும், துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு செல்ல ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. நல்லவேளையாக அவர்களால் பூட்டை உடைக்க முடியவில்லை.

அச்சத்தில் போலீசார்

ஒருபக்கம், காவல் நிலையத்திற்கு பிற பகுதிகளில் இருந்து போலீசார் வர முடியாதபடி தடைகளை ஏற்படுத்தியாகியாச்சு.. மற்றொரு பக்கம், போராட்ட கும்பல் காவல் நிலையத்தை நெருங்க ஆரம்பித்தது. எனவே, அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவியது. காவல் நிலையத்தில் இருந்த சில போலீசார் அச்சத்தின் உச்சத்துக்கு சென்றனர். எப்போது வேண்டுமானாலும், போராட்ட கும்பல், காவல் நிலையத்திற்குள், ஆயுதங்களுடன் நுழைய வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அவர்கள் என்ன செய்ய என திகைத்தனர். காவல் நிலையத்திற்குள் இருந்த போலீசார், தங்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை யோசிக்கத் தொடங்கினர்.

காவல்துறை நடவடிக்கை ஆரம்பம்

போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகள், ரைஃபில்கள் மற்றும் 2000 துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளன. பரபரப்புடன் அங்குமிங்கும் காவல் நிலையத்திற்குள் ஓடிய போலீசார், ஆயுதங்களையெல்லாம் சேகரித்து தயார் நிலைக்கு வந்தனர். ஆனால் முதலில் துப்பாக்கியால் சுட கூடாது என்றும் முடிவு செய்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக வன்முறையாளர்களை நோக்கி காவல்துறையினர் முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்படியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் காவல்நிலையத்தை தாக்கும் நோக்கத்தோடு முன்னேறி வருவது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

புறப்பட்டன குண்டுகள்

இதையடுத்து வன்முறையாளர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளை பிரயோகித்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால் அதற்கும் அந்த கும்பல் அசைவதாக இல்லை. இதனால் காவல் நிலையத்திற்குள் இருந்த போலீசாருக்கு மேலும் பீதி அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலவரக்காரர்களை நோக்கி எச்சரிக்கை பிறப்பித்துள்ளனர் போலீசார். அப்படி இருந்தும் காவல் நிலையத்தை நோக்கி வன்முறையாளர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர். நொடிக்கு நொடி பரபரப்பும், அச்சமும் போலீசார் மத்தியில், அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. அப்போது போராட்டக்காரர்களை நோக்கி, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தது. இதில் ஜலீல் குத்ரோலி (49) மற்றும் நவ்ஷீன் (23) ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.

காவல்துறை கட்டுப்பாடு

காவல் நிலையத்தில் இருந்து சரியாக 124 மீட்டர் தொலைவில் சுடப்பட்டு நவ்ஷீன் கொல்லப்பட்டுள்ளார். ஜலீல் குத்ரோலி இன்னும் அருகாமையில் வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் இருந்து, 90 மீட்டர் தொலைவில் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளார். இவ்வாறு இரண்டு பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதை பார்த்த பிறகு, பயம் போராட்டக்காரர்கள் மத்தியில் பரவியது. அதுவரை போலீசார் பயந்து கொண்டிருந்த நிலையில், அதன் பிறகு போராட்டக்காரர்கள் பயப்பட ஆரம்பித்தனர். அவர்கள் வந்த வழியே, கலைந்து பின்னோக்கி ஓட தொடங்கினர். இதையடுத்து, இரவு 7 மணியளவில் அந்த பகுதியின், நிலைமை முழுக்க காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

போலீஸ் விளக்கம்

போலீஸ் விளக்கம்

காவல்துறையின் தகவல்படி, பந்தர் போலீஸ் நிலையம் மிக முக்கிய இலக்காக போராட்டக்காரர்களால் திட்டமிட்டு மாற்றப்பட்டிருந்தது. காவல் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, துப்பாக்கிகளையும் எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதுதான் அவர்கள் நோக்கமாக இருந்துள்ளது. எனவேதான் காவல்நிலையத்துக்கு செல்லக்கூடிய 4 சாலைகளையும் திட்டமிட்டு அடைத்துவிட்டு காவல் நிலையத்தை நோக்கி சுமார் 5000 போராட்டக்காரர்கள் முன்னேறினர் என்கிறது காவல்துறை. இந்த தடைகளை எல்லாம் மீறி, வேறு பகுதியிலிருந்து போலீசார் பந்தர் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமென்றால், சுமார் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும். அதற்குள் வன்முறையாளர்கள் காவல் நிலையத்தை சூறையாடி இருப்பார்கள். போலீசாரின் உயிருக்கு உத்தரவாதம் இருந்திருக்காது. எனவே நாங்கள், எங்களிடமிருந்த ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினோம் என்று கூறுகிறது போலீஸ் துறை.

உறவினர் கருத்து

உறவினர் கருத்து

அதேநேரம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தார் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், காவல்துறை லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்து இருக்கமுடியும். ஆனால், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறு. கொல்லப்பட்ட இருவரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டது 50 முதல் 60 பேர்தான். அவர்களை போலீசார் நினைத்திருந்தால் துப்பாக்கி சூடு இல்லாமல் கலைத்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

இதனிடையே இந்த கலவர சம்பவம் தொடர்பாக இதுவரை 60 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மங்களூர் நகரம் அமைந்திருக்கக் கூடிய, தட்சிண கன்னடா, மாவட்டம் முழுக்க இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மங்களூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இருப்பினும் நீதி விசாரணை தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Police has released videos of Violence which took place on December 19th in Mangalore, which station was the target.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X