For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசைன் டிசைனான டிரஸ்களில் அசத்திய மோடி...

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது, வித்தியாசமான உடைகள் அணிந்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்து, ஊடகங்களின் பாராட்டுக்களை அள்ளியுள்ளார் மோடி.

பொதுவாகவே சிறந்த உடையலங்காரத்துக்கு பெயர் பெற்றவர் பிரதமர் மோடி. லோக்சபா தேர்தலின் போது கூட அவரது உடை பெரிதும் பேசப்பட்டது. பிரதமராக பதவியேற்ற போதும், அவரது உடை ஊடகங்களால் கவனிக்கப் பட்டது.

மோடியைப் போலவே, ஒபாமாவின் மனைவி மிஷலும் வித்தியாசமான உடை மற்றும் சிகை அலங்காரத்தால் மற்றவர்களின் பாராட்டுகளைக் குவிப்பவர்.

பூப்போட்ட கவுன்...

பூப்போட்ட கவுன்...

அந்தவகையில், ஒபாமா மற்றும் மிஷலின் இந்திய பயணம் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அதற்குத் தகுந்தாற்போல், இந்தியா வந்திறங்கிய போது இந்திய உடைவடிவமைப்பாளர் தயாரித்த பூப்போட்ட கவுன் அணிந்து வந்தார் மிஷல்.

மோடியின் சால்வை...

மோடியின் சால்வை...

ஆனால், மிஷலின் கவுன் புராணம் அவர் விமானத்தில் இருந்து கீழே இறங்கும் வரை தான் நீடித்தது. அதற்குப் பிறகு ஒபாவை வரவேற்க வந்திருந்த மோடியின் மீது அனைவரது கவனமும் திரும்பியது. அப்போது மோடி வெளிர் தங்க நிறத்தில் கோட் அணிந்து, காவி நிறத்தில் மேல்துண்டு அணிந்திருந்தார்.

பேர் எழுதிய உடை...

பேர் எழுதிய உடை...

அதனைத் தொடர்ந்து, பகல் 12:50 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு வந்தபோது வயலட் நிற கோட் அணிந்திருந்தார் மோடி. முதலில் அந்த கோட்டில் கோடுகள் வரையப் பட்டிருந்ததாகத் தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், நன்கு உற்று பார்த்த போது, அதில் மோடியின் பெயர் சிறிய எழுத்துகளில் இருந்தது கண்டு அனைவரும் ஆச்சர்யமடைந்தனர்.

வெள்ளை நிற குர்தா...

வெள்ளை நிற குர்தா...

இதேபோல், இரவு 08:30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்தில் வெள்ளை நிற கோட் அணிந்திருந்தார் மோடி. மோடியின் உடையைப் பார்த்து தானும் அதுபோல், ‘குர்தா' அணிய ஆசைப்பட்டதாக ஒபாமாவே தெரிவித்தார்.

தலைப்பாகை....

தலைப்பாகை....

திங்கட்கிழமை குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சத்ராங்கி டர்பன் மற்றும் சபா அணிந்து காட்சி அளித்தார் மோடி. அவரது வித்தியாசமான தலைப்பாகை அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.

வழக்கமான உடை தான்...

வழக்கமான உடை தான்...

மாலை 04:30 மணிக்கு பிரதமர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், மோடி தனது வழக்கமான உடை அணிந்து கலந்து கொண்டார். ஆனால், அதுவும் மற்றவர்களால் பெரிதும் கவரப்பட்டது.

English summary
The Prime minister Modi's dresses were attracted more than US president Obama's wife Michelle's dress at their Indian trip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X