For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக வெப்பமயமாதலை தடுக்கும் ஏசி இதுதான்!

குறைந்த மின்சார செலவில் அதாவது 3 லைட்டுகள் எரிந்தால் எவ்வளவு மின்சாரம் ஆகுமோ அந்த அளவுக்கு ஏசியை பயன்படுத்தும் போதும் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வோமா என்ன?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

அகமதாபாத்: தங்கள் நிறுவனத்தின் ஏசியை பயன்படுத்தினால் மிகக்குறைந்த மின்சார கட்டணத்துக்கு நாங்கள் உத்தரவாதம் என்கின்றனர் ஒரு நிறுவனத்தினர்.

அந்த காலங்களில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் இவை இருந்தால் அதுதான் பணக்கார வீடு என்பர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஓடால் வேயப்பட்ட வீடுகளிலும் ஏசி காணப்படுகிறது.

ஏழைமை நிலையில் இருந்தாலும் நம்மை போல் நம் பிள்ளைகள் புழுக்கத்தால் கஷ்டப்படாமல் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். எனவே மாத தவணை முறையை கொண்டு அனைத்து பொருள்களை குறைந்தபட்சம் 6 மாதத்துக்குள் ஒன்றன்பின் ஒன்றாக வாங்கிக் கொள்கின்றனர்.

கரெண்ட் பில்

கரெண்ட் பில்

இன்றைய காலகட்டங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு அதில் கிடைக்கும் ஊதியத்தில் குழந்தைகளை படிக்க வைத்து, வாடகை செலுத்தி, வீட்டு செலவு இவற்றுக்கு படாதபாடுபடுகின்றனர். இவைக் கூட பரவாயில்லை, ஆனால் நம் வசதிக்காக வாங்கி போட்ட பொருள்களுக்கு நாம் செலுத்தும் மின்சாரம் கட்டணமோ மிகவும் அதிகம்.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

மின்சார கட்டணத்தை ஒரு விளம்பரத்தில் சொல்வர் என்னாது ஹார்ட் அட்டாக்கா என்று அதற்கு மருத்துவர் சொல்வார், இல்லை இது பில் அட்டாக் என்று. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை போல் அனைவரின் கழுத்தையும் நெரிக்கிறது இந்த மின்சார கட்டணம். பொருளை கூட எளிதில் வாங்கி விடலாம் போல. இவற்றை ஓரளவு சமாளிக்க இன்வெர்டர் ஏசி, 5 ஸ்டார் ஏசி என்று வந்தாலும் கரெண்ட் பில் எங்கே கையை கடிக்குமோ என்ற அச்சம் எழத்தான் செய்கிறது. அப்படியே அவற்றை பயன்படுத்தினாலும் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை காட்டிலும் சொற்ப அளவு கட்டணமே குறையும்.

80 சதவீதம் வேஸ்ட்

80 சதவீதம் வேஸ்ட்

நாம் வாங்கும் ஏசிகளின் 80 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. ஏசியின் கூலிங் படுக்கை அறையை மட்டுமல்லாமல் பீரோ, கப்போர்டுகள், கழிப்பறைகள், கதவு, ஜன்னல் ஓரங்களில் உள்ள வழிகள், அலங்கார பொருள்கள், துணிகள் இவற்றில் சென்று வீணாகிறது.

உலகம் வெப்பமயமாதல்

உலகம் வெப்பமயமாதல்

தற்போது பெரும்பாலான வீடுகளில் 2 அல்லது 3 ஏசிக்கள் நிறுவப்பட்டுள்ளதால் உலகம் வெப்பமயமாதல் நடைபெறுகிறது. இதனால் மழையின்மை, வறட்சி, கால மாற்றம் உள்ளிட்டவையால் சிக்கி சின்னாபின்னமாகிறோம். மேலும் 2400 வாட்ஸுக்கு குறைவாக ஏசி கிடைப்பதில்லை. அப்படியே அதை வாங்கினாலும் அதை பிக்ஸ் செய்ய அனுபவம் வாய்ந்த ஒருவரை அழைக்க வேண்டியுள்ளது, சுகவாசியாக இருக்க இத்தனை பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

டூபிக் நிறுவனம்

டூபிக் நிறுவனம்

குஜராத்தில் அகமதாபாதில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் தங்களிடம் வாங்கும் ஏசியால் மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படாது என்கின்றனர். இவர்கள் வழங்கும் ஏசியால் உலக வெப்பமயமாதலை தடுப்பது, வெறும் ரூ.500 மின் கட்டணம் என அனைத்தையும் தீர்க்கும் என்கின்றனர். இவர்களது ஏசியை பயன்படுத்துவதால் தலைவலியோ, அலர்ஜியோ ஏற்படாதாம். முக்கியமாக கொசு தொல்லை இருக்காதாம்.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

இந்த நிறுவனத்தின் ஏசி இரு படுக்கை வசதி, ஒரு படுக்கை வசதி கொண்ட கட்டில்களுடன் இணைக்கப்படும். கிட்டதட்ட விண்டோ ஏசியை போன்றது. சிங்கிள் காட்டின் விலை ரூ.22,000. டபுள் காட்டின் விலை ரூ.25000. இந்த கட்டில் ஏசி இணைக்கப்பட்டு சுற்றிலும் துணிகளால் மூடப்படுவதால் கொசுக்களும் வராது, ஏசி கூலிங்கும் வீணாக மற்ற இடங்களுக்கு பரவாது. இதை எளிதாக எந்த இடத்துக்கும் கொண்டு செல்லலாம்.

365 நாள்களும்

365 நாள்களும்

குளிர்காலங்களில் இதமான ஹீட்டர் போன்றும், வெயில் காலங்களில் கூலிங்காகவும் இருக்கும். இதன் எடையோ 13 கிலோதானாம்.எனவே இடம்பெயர செய்வது ஈசியாகும். மொத்தத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏசியாகும். 500 ரூபாய் கட்டணத்தில் மாதந்தோறும் குளுகுளுவென அதுவும் சுத்தமான காற்றை பெற கசக்குமா என்ன?

English summary
Worlds first air conditioner for your single n double bed with special fabrics tent and very small AC unit which runs on 400 watts only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X