For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாம் டெக்னாலஜி.. ஒரேயொரு ஆண்ட்ராய்ட் ஆப்பை வைத்து பாஜகவை கவிழ்த்த காங்கிரஸ்!

கர்நாடகாவில் பாஜக தலைவர்கள், காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களிடம் பேசியதாக வெளியான ஆடியோக்கள்தான் கடைசி நேரத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக தலைவர்கள், காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களிடம் பேசியதாக வெளியான ஆடியோக்கள்தான் கடைசி நேரத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரஸ் கட்சி ரெக்கார்ட் செய்ய உதவும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஆடியோ அரசியல்

ஆடியோ அரசியல்

நேற்று காலை வரை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் எண்ணத்தில்தான் இருந்திருக்கிறார். ஆனால் 11 மணிக்கு அவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரிடம் பேசியதாக வெளியான ஆடியோதான் மொத்தமாக அவர் மனதை மாற்றியுள்ளது. நேற்று மட்டுமில்லாமல் அதற்கு முதல்நாளும் பாஜகவை சேர்ந்த சோமசேகர ரெட்டி பேசும் ஆடியோ வெளியாகி வைரல் ஆனது.

முதலில் வந்தது

முதலில் வந்தது

முதலில் பாஜகவின் ரெட்டி காங்கிரஸ் ,மஜத எம்எல்ஏக்களிடம் பேசும் ஆடியோ வைரல் ஆனது. இவ்வளவு பணம் தருகிறோம், 100 கோடி தருகிறோம் என்று அவர் கூறியது எல்லாம் ஆடியோவில் பதிவானது. காங்கிரஸ் முதல் ஆயுதமாக எடுத்து இதைத்தான். பாஜக குதிரை பேரம் செய்கிறது. இது பெரிய அநீதி என்று குற்றச்சாட்டு வைத்தது. ஆனால் அந்த ஆடியோ பொய்யானது என்று பாஜக மறுத்தது.

தொடர்ந்தது

தொடர்ந்தது

ஆனால் காங்கிரஸ் விடாமல் துரத்தியது. நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சனை போய் கொண்டு இருக்கும் போதே, காங்கிரஸ் அடுத்த ஆடியோவை வெளியிட்டது. இந்த முறை நேரடியாக எடியூரப்பாவை தாக்கியது. எடியூரப்பா காங்கிரஸ் எம்எல்ஏவிடம் கொச்சி செல்ல வேண்டாம், எப்படியாவது தப்பித்து வந்துவிடுங்கள் எல்லாம் செய்கிறோம் என்று பேசியது போல அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது. காங்கிரஸ் இந்த ஆடியோவை நேரம் பார்த்து வெளியிட்டு பிரச்சனையை உண்டாக்கியது.

பெரிய நெருக்கடி

பெரிய நெருக்கடி

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு போனை சரியாக ரெக்கார்ட் செய்து கட்சியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். அவர்கள் இப்படி வெளியிட்ட ஆடியோக்கள்தான் பெரிய நெருக்கடியை அந்த கட்சிக்கு கொடுத்தது. எடியூரப்பவே நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நாடு முழுக்க அவருக்கு தேசிய அவமானத்தை இந்த திட்டம் தேடிக்கொடுத்துள்ளது.

திட்டம்

திட்டம்

தற்போது கட்சி வட்டாரங்கள் இது எப்படி நடந்தது என்று தெரிவித்துள்ளது. அதன்படி எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட உடன் அவர்களின் போன் வாங்கப்பட்டு எல்லோர் மொபைலிலும் தானாக ரெக்கார்ட் செய்யும் ஆண்ட்ராய்ட் ஆப்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் பேசும் எல்லா காலும் ரெக்கார்ட் செய்யப்பட்டு நான்கு நாட்களாக பேசிய கால்கள் எல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்தே அவர்கள் ஆடியோ வெளியிட்டுள்ளனர்.

English summary
How a single Android app played a bad role Yeedy's CM dream!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X