For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடேங்கப்பா.. பொன்னியின் செல்வனை மிஞ்சும் பிரம்மாண்டம்! நவராத்திரிக்கு ஒரே இடத்தில் திரண்ட பொதுமக்கள்

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஒன்று கூடி நடனமாடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

வட இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக இருக்கும். ஒன்பது நாட்களும் அவர்கள் நவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் லட்சம் பேர், ஒரே இடத்தில் ஒன்று கூடியது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

சிறையில் சவுக்கு சங்கர் தொடர் உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு.. உள் மருத்துவமனையில் சிகிச்சை! சிறையில் சவுக்கு சங்கர் தொடர் உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு.. உள் மருத்துவமனையில் சிகிச்சை!

நவராத்திரி பண்டிகை

நவராத்திரி பண்டிகை

நவராத்திரி பண்டிகை மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக இருக்கும். அங்கு வெகு விமர்சையாக நவராத்திரியைக் கொண்டாடுவார்கள்.

குஜராத்

குஜராத்

நவராத்திரி கொண்டாட்டங்கள் வட இந்தியாவில் முழு வீச்சில், கொண்டாடப்படும் நிலையில் குஜராத்தின் வதோதரா நவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடனமாடியது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டும் மீண்டும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.

டிரோன் காட்சி

டிரோன் காட்சி

வதோதரா நவராத்திரி விழாவில் பல ஆயிரம் மக்கள் ஒன்று கூடி நடனம் ஆடினர். இது தொடர்பான டிரோன் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. டிரோன் காட்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் இது இந்தியாவின் சிறப்பை காட்டுவதாகவும் இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைப்படங்களை மிஞ்சும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் பலர் பாராட்டினாலும், சிலர் எச்சரிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் தங்கள் ட்விட்டரில், "பார்க்க சூப்பராக இருக்கிறது. ஆனால், இத்தனை பேர் ஒன்றுகூடும் நிகழ்வுக்குச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கும் என நம்புகிறேன். மகிழ்ச்சியான நிகழ்வுகள் சோகமாக மாற சில நொடிகளே போதும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நவராத்திரி

நவராத்திரி

நவராத்திரி விழாவில் கடைசி 3 நாட்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாகக் கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

English summary
Navratri celebrations in in Vadodara Navratri Festival grabbed attention of many: Public Navratri celebrations resumed after tow years break because of coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X