For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுகாதார பணியாளர்களுக்கு சல்யூட்.. கலக்கலாக ஒளிரும் கொல்கத்தா ஹவுரா பாலம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக, கண்கவர் விளக்குகள் மற்றும் ஒலி நிகழ்ச்சி மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் இன்று அரங்கேறியது. இன்று உலகளவில் யுனெஸ்கோவால் சர்வதேச ஒளி தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஒளி நிகழ்ச்சி நடத்தப்பட்டது சிறப்பு.

சர்வதேச ஒளி நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று, லேசரின் முதல் வெற்றிகரமான செயல்பாட்டின் ஆண்டுவிழாவான அனுசரிக்கப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு இன்று அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியோடர் மைமான் லேசர் கொண்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். எனவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

Howrah Bridge, illuminated to pay tribute to corona frontline workers

ஹவுரா பாலத்தில், இந்த ஒளி மற்றும் ஒலி அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியால் இந்த ஆண்டு ஜனவரியில் கொல்கத்தா பயணத்தின் போது தொடங்கி வைக்கப்பட்டது ஆகும்.

லாக்டவுன் 4: சென்னை உட்பட தமிழகத்தில் 5 நகரங்களுக்கு தளர்வு இல்லை.. வெளியான தகவல்லாக்டவுன் 4: சென்னை உட்பட தமிழகத்தில் 5 நகரங்களுக்கு தளர்வு இல்லை.. வெளியான தகவல்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவ ஊழியர்கள், இதுவரை பல முறை பாராட்டப்பட்டுள்ளனர். மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லாக்டவுனுக்கு முன்பாக, சுய ஊரடங்கிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அன்றைய தினம், சுகாதார பணியாளர்களை பாராட்டி கைதட்டுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார், அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மெழுகுவர்த்திகள் மற்றும் தீபங்களை ஏற்றி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், ஒரு மெகா முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களை பாராட்டும் விதமாக, மருத்துவமனைகள் மீது முப்படைகள் சார்பில் மலர் தூவி வாழ்த்தப்பட்டது.

English summary
Howrah Bridge, illuminated today by Kolkata Port Trust on the occasion of International Day of Light, to pay tribute to COVID19 frontline workers for their contribution in the fight against the pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X