For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஆறு அப்படியே உறைஞ்சு போச்சு!

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள ஒரு ஆறு அப்படியே மொத்தமாக உறைந்து போய் விட்டது.

இமாச்சல் பிரதேசத்தின் உயர்ந்த மலைப் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் நீர்நிலைகள் உறையத் தொடங்கியுள்ளன. லாஹால் - ஸ்பிதி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு வெப்ப நிலை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஏரிகள் உறைந்து வருகின்றன.

HP river freezes as Temperature dips

சாற்று என்ற இடத்தில் உள்ள சந்திரா ஆறு முழுமையாக உறைந்து விட்டது. பனியாக காணப்படுகிறது இந்த ஆறு. இந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சாலைகள் அனைத்தும் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளன. விமானப்படையினர் இங்கு சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். சிக்கியுள்ளவர்களில் வெளிநாட்டவரும் உள்ளனர்.

ரோதாங் கணவாய், குன்ஸும் கணவாய், பரலாச்சா கணவாய் ஆகியவற்றுக்கும் லாஹால் - ஸ்பிதி மாவட்டத்திற்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மின்சாரமும் இல்லை, குடிநீர்த் தட்டுப்பாடும் கடுமையாக உள்ளதாம்.

English summary
Lakes and rivers have begun to freeze as Spiti valley area records sub-zero temperature. Chandra River from Chhattru area has frozen completely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X