For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவர் ஒன்றும் பெண்ணின் எஜமானர் அல்ல... உச்சநீதிமன்றம் அதிரடி!

பெண்ணின் எஜமானர் அல்ல கணவர் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதல் குற்றம் கிடையாது.. அதிரடி தீர்ப்பின் முழு விபரம்!- வீடியோ

    டெல்லி: பெண்ணின் எஜமானர் அல்ல கணவர் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    திருமணத்தை மீறிய தவறான உறவில் ஆண் மட்டுமே குற்றவாளியாக எடுத்துக்கொள்ளப்படும் சட்டப்பிரிவு 497-ஐ நீக்க வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    அதன்படி கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வயது வந்த ஆண் பெண் இடையே கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    கணவர் எஜமானர் அல்ல

    கணவர் எஜமானர் அல்ல

    மேலும் பெண்ணின் எஜமானர் அல்ல கணவர் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்க கோரும் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

    தண்டனை

    தண்டனை

    கள்ளத்தொடர்பில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டு தண்டனை வழங்க சட்டம் 497 வழி செய்கிறது. 497, சட்டப்படி மணமான பெண்ணுடன் ஆண் கள்ளத்தொடர்பு வைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இடமுள்ளது.

    3 நீதிபதிகள் ஆதரவு

    3 நீதிபதிகள் ஆதரவு

    இந்நிலையில் சட்டப்பிரிவு 497-யை ரத்து செய்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். தகாத உறவு குற்றமில்லை என்றாலும் குடும்ப உறவுகளை பாதிக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளார். இதற்கு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 3 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கணவன் மனைவி விவாகரத்து

    கணவன் மனைவி விவாகரத்து

    மேலும் ஆணுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தால் மனைவி விவாகரத்து கேட்கலாம் என்றும் மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருந்தால் கணவர் விவாகரத்து கோரலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Supreme Court has said that Husband is not a Owner of wife. Woman has to be treat equal to men said Supreme court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X