For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான்தான் கொன்றேன்.. பரபரக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ

மனைவி, 3 குழந்தைகளை கொன்று கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

காசியாபாத்: "ஆமா.. என் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை கொன்றது நான்தான்.. வீட்டிலேயேதான் வெச்சு கொன்றேன்.. கூல்டிரிங்ஸ்ல தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்தேன்" என்று ஒருவர் வாட்ஸ்அப்பில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் வசித்து வருபவர் சுமித் குமார். இவருக்கு 34 வயதாகிறது. கல்யாணமாகி 4வயதில் இரட்டை குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.

ஐடி கம்பெனியில் கம்ப்யூட்டர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். அதனால் குடும்பம் கொஞ்சம் வசதியாகவே இருந்தது.

இலங்கை குண்டுவெடிப்பு.. மனித குலத்தின் மீதான பயங்கரவாதம்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! இலங்கை குண்டுவெடிப்பு.. மனித குலத்தின் மீதான பயங்கரவாதம்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

ஆசிரியை

ஆசிரியை

இந்திராபுரத்தில் ஒரு அபார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். இதுபோக சுமித்குமாரின் மனைவி ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.

மது பழக்கம்

மது பழக்கம்

இந்நிலையில், போன டிசம்பர் மாதம் வேலையை விட்டுவிட்டார். இதனால் குடும்பம் வருமானம் இல்லாமல் தவித்து வந்ததாக தெரிகிறது. அதனால் நடத்தை சரியில்லாமல் போய், தண்ணி அடிக்கவும் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்தேன்

கொலை செய்தேன்

இந்த நிலையில் குமார் திடீரென வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "என் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான் தான் வீட்டிலேயே வெச்சு கொலை செய்தேன்.

தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

கூல் டிரிங்ஸ்-ல் அவர்களுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அதுக்கப்புறம், கூர்மையான பொருளை வெச்சு அவர்களை கொன்னுட்டேன்" என்று கூறி எதற்காக கொலை செய்தேன் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Husband killed his wife and three children and shares confession video in Whatsapp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X