மாமியாருடன் மருமகனுக்கு கள்ளக்காதல்.. மனைவியை பிரிந்து.. தனிக்குடித்தனம் நடத்தியதால் அதிர்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு மாமியாருடன் மருமகன் குடித்தனம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டு கொண்டனர். இந்த நிலையில் இவர்களது சண்டை பஞ்சாயத்து வரை சென்றது.
இரு குடும்பத்தினரிடையே பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு கிருஷ்ண கோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க அவரின் மனைவி பிரியங்கா வீட்டில் இருவரும் சில காலத்திற்கு தங்கியிருக்குமாறு பஞ்சாயத்தார் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் வீட்டோட மாப்பிள்ளையாக பிரியங்கா தாஸின் வீட்டிலேயே இருந்தார்.
இந்த நிலையில் சொந்த வீட்டிற்கு செல்லலாம் என மனைவி அழைத்தாலும் மாமியார் வீட்டிலேயே இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். தாய் வீட்டை விட்டு செல்ல யாருக்குத்தான் மனம் வரும்? இதனால் பிரியங்கா தாஸும் கணவரின் மறுப்பு குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் தனது மாமியார் ஷிபாலி தாஸுடம் மறைமுகமாக கிருஷ்ண கோபால்தாஸ் காமலீலைகளை நடத்தியுள்ளார்.
பிரியங்கா தாஸ் வீட்டில் இல்லாத நிலையில் மாமியாரும் மருமகனும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் மகளின் வாழ்க்கை என்றும் பாராமல் ஷிபாலி தாஸ் தனது மருமகனுடன் கள்ள உறவை தொடர்ந்தார். இப்படியாக பிரியங்காவுக்கு தெரியாமல் இவர்களது கள்ள உறவு 3 ஆண்டுகளுக்கு மேல் சென்றது.
இந்த நிலையில் இவர்களது தவறான உறவை மகள் பிரியங்கா எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து வீட்டில் பூகம்பம் வெடித்தது. மகளுக்கு தெரிந்துவிட்டதால் இனி கள்ளக்காதலை தொடர முடியாது என கருதிய மாமியார் தனது மருமகனை அழைத்து கொண்டு தனி குடித்தனம் நடத்த தொடங்கினார்.
இதையடுத்து தனது கணவனை தன்னிடம் ஒப்படைக்குமாறு தனது தந்தையுடன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகனை இழுத்துக் கொண்டு மாமியார் ஓடி சென்று தனிக்குடித்தனம் நடத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.