For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணன்- தம்பி, சித்தப்பா- மகள் வெவ்வேறு அணிகளில் மோதி பார்த்தோம்.. இங்க யார் யார் மோதறாங்கனு பாருங்க

Google Oneindia Tamil News

ஹைதரபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பாஜக சார்பிலும் அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அரசியல் என்று வந்துவிட்டால் நண்பர்கள் எதிரிகளாவதும் எதிரிகள் நண்பர்களாவதும் சகஜம்தான். அதுபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெவ்வேறு அணிகளில் போட்டியிட்டு வருவதும் தற்போது வழக்கமாகி வருகிறது.

தமிழகத்தில் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் அண்ணன் தம்பிகள் லோகிராஜனும் மகாராஜனும் நேரடியாக மோதுகின்றனர். அது போல் கன்னியாகுமரியில் போட்டியிடும் சித்தப்பாவான எச் வசந்தகுமாரை எதிர்த்தும் தனது சீனியர் பொன் ராதாகிருஷ்ணுக்கு ஆதரவாகவும் தமிழிசை சவுந்திரராஜன் பிரசாரம் செய்யப் போகிறார்.

அண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை! அண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை!

பாஜக

பாஜக

அது போல் ஆந்திரத்திலும் ஒரு சுவாரஸ்யம் நடக்க போகிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. இவர் முன்னாள் அமைச்சராவார். பாஜக சார்பில் விசாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசம்

இவரது கணவரும் முன்னாள் அமைச்சருமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டசபை இடைத்தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 2004-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து இருவருமே விலகினர்.

ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி

பின்னர் காங்கிரஸில் இணைந்தனர். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பிரிவினை காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அரசியலில் இருந்து விலகியே இருந்த வெங்கடேஸ்வரராவ் அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார்.

சட்டசபை இடைத்தேர்தல்

சட்டசபை இடைத்தேர்தல்

அமெரிக்க குடியுரிமை பெற்ற மகனுக்கு பதிலாக டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டசபை இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். போட்டி பலமாக இருக்கும் போலயே!

English summary
Husband and wife compete in two different parties in Andhra LS Polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X