For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்துக்களை அரசு கைப்பற்ற வேண்டும்.. வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதா சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஜெயலலிதாவின் சொத்துகளை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத் புறநகர் பகுதியான பேட்பஷிராபாத் அருகே ஜி.டி. மெட்லா, என்ற இடத்தில் ஜெ.ஜெ. கார்டன் என்ற பெயரில் சுமார் 11 ஏக்கர் அளவில் சொத்துகள் உள்ளன. இதேபோல் ஸ்ரீ நகர் காலனியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது.

Hyderabad High Court 1 Lakh Fine For Petition On Jayalalithaa

சினிமாவில் நடித்த போது அவர் இந்த வீட்டுக்கு வந்து தங்குவதுண்டு. அரசியலில் நுழைந்த பிறகு அவர் இங்கு வருவது இல்லை என கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் பெயரில் ஹைதராபாத்தில் உள்ள அனைத்து சொத்துகளையும் தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என கூறி கைரிப் கைடு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால் அந்த சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கு பொது நலநோக்கத்தோடு தொடரப்படவில்லை விளம்பரத்திற்காகவே தொடரப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

English summary
Hyderabad high court has imposed a fine of Rs.1 lakh on an organisation that filed a plea demanding that the state government should take over the properties of late Tamil Nadu chief minister J Jayalalithaa in Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X