For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்து போனதாக கருதப்பட்ட பெண்ணை கைது செய்த போலீஸ்.. இன்சூரன்ஸ் கம்பெனியை ஏமாற்ற நடந்த நாடகம்

இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பணம் பெறுவதற்காக இறந்து போனதாக நடித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பணம் பெறுவதற்காக இறந்து போனதாக நடித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பித்தலாட்டத்திற்கு உடந்தையா இருந்த அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து 1 கோடி ரூபாய் பணம் பெறுவதற்காக அவர்கள் இந்த ஏமாற்ற வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் நடத்திய இந்த நாடகம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. சொந்த உறவினர்கள் பலரையும் அவர்கள் இந்த பொய்யின் மூலம் ஏமாற்றி இருக்கின்றனர்.

நாடகம் நடத்திய தம்பதி

நாடகம் நடத்திய தம்பதி

ஹைதராபாத்தில் உள்ள சையத் சகில் ஆலம் என்ற நபர் தன்னுடைய மனைவி இறந்துவிட்டதாக கூறி அவர் பெயரில் எடுத்து வைத்து இருந்த இன்சூரன்ஸ் பணத்தை கேட்டு இருக்கிறார். இதற்காக அந்த பிரபல வங்கியில் தன் மனைவி நசியாவின் இறப்பு சான்றிதழையும் சமர்ப்பித்து இருக்கிறார். மேலும் மனைவி இறந்த பின் புதைத்த இடத்தையும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளார்.

நாடகம் அம்பலம் ஆனது

நாடகம் அம்பலம் ஆனது

ஆனால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அவரின் செயலில் சந்தேகம் வந்து இருக்கிறது. இந்த நிலையில் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறது. அதில் அந்த பெண் மரணம் அடையவே இல்லை என்று கண்டிபிடிக்கபட்டது. ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே அவர் இப்படி செய்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் பொய் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்தனர்

கைது செய்தனர்

ஏமாற்று வேலையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது உறவினர்கள் சிலரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில உறவினர்கள் உண்மையிலேயே நசியா இறந்துவிட்டதாக நினைத்து ஏமாந்து இருக்கின்றனர்.

இறப்பு சான்றிதழ் வாங்கியது எப்படி

இறப்பு சான்றிதழ் வாங்கியது எப்படி

இவர்களின் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்து இருக்கிறார். அவர்களின் மரண சான்றிதழில் சில மாற்றங்களை செய்து புதிய மரண சான்றிதழ் உருவாக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல் அவர்கள் இறந்ததாக காட்டிய இடமும் அந்த நபர் இறந்த பின் புதைத்த இடம் ஆகும்.

English summary
Hydrabad police has arrested a dead woman, for duping insurance firms to get 1 Crore insurance money along with her husband to declaring herself dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X