For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருப்புடா.. மக்கள் எழுச்சியை தாக்குப் பிடிக்க முடியாமல் நெடுவாசலை விட்டு ஓடும் கர்நாடகத்து ஜெம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்!

    டெல்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தின், நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ஜெம் லெபாலட்டரிஸ் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசால் மாற்றப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம், இந்த ஒப்பந்தம் முடிவானது. இதையடுத்து ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்தமானது. ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு கருதி, பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

    Hydrocarbon plan may be withdrawn from Neduvasal

    பொதுமக்கள் போராட்டத்தையடுத்து, ஜெம் நிறுவனத்திற்கு தமிழக அரசு குத்தகையை மாற்றித்தரவில்லை. ஜெம் நிறுவனம் தமிழக அரசுக்கு் இதுவரை10 கடிதங்கள் எழுதியும், மத்திய அரசு 3 கடிதங்கள் எழுதி கோரிக்கைவிடுத்தும், தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

    இதையடுத்து, நெடுவாசலுக்கு பதில் வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கு ஜெம் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தாமதமாவதால் இழப்பு ஏற்படுவதால் வேறு இடத்தை வழங்க ஜெம் கோரிக்கை விடுத்துள்ளது.

    Hydrocarbon plan may be withdrawn from Neduvasal

    எனவே, விரைவில் மத்திய அரசு வேறு இடத்தை ஒதுக்கினால், நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் கைவிடும் என தெரிகிறது. இது பொதுமக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Hydrocarbon plan may be withdrawn from Neduvasal, by gem company, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X