For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வதந்திகளை நம்பாதீர்கள், நான் நலமாக உள்ளேன்- தீபாவளி வாழ்த்துக்கள்: அப்துல் கலாம்

By Siva
Google Oneindia Tamil News

- டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன்

டெல்லி: தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 15ம் தேதி தனது 83வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதாகவும், அவரின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருப்பதாகவும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வேகமாக பரவியது. கலாம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வங்கதேசம் சென்றபோது தான் இந்த தகவல் பரவியது.

Kalam

இந்நிலையில் இது குறித்து கலாம் அலுவலகம் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

அப்துல் கலாம் நலமாக உள்ளார். எஸ்.எம்.எஸ். மூலம் பரவிய பொய்யான தகவல் ஃபேஸ்புக்கிலும் பரவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து அறிந்த கலாம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சில தகவல் பரவியுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. வதந்திகளை நம்பாதீர்கள். அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த மே மாதமும் கலாமின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல விண்வெளி ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹபீஸ் சலே முகமது அலாதீன் இறந்தபோது சில பத்திரிக்கைகள் கலாம் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டன.

English summary
The rumour mills are at it again. They seem to be hovering over India’s Missile Man Dr A P J Abdul Kalam, spreading rumours on the octogenarian scientist’s health. However, his office has categorically clarified that the former President is hale and hearty. “He is absolutely fine. He is at work,” a close aide told OneIndia on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X