For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் அதிர்ச்சியில்லை.. மனம் திறந்தார் பதவியிழந்த மெஹபூபா முப்தி!

கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் அதிர்ச்சியில்லை என காஷ்மீரில் முதல்வர் பதவியை இழந்த மெஹபூபா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெகபூபா முப்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு-வீடியோ

    ஸ்ரீநகர்: கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் அதிர்ச்சியில்லை என காஷ்மீரில் முதல்வர் பதவியை இழந்த மெஹபூபா தெரிவித்துள்ளார்.

    ஜம்மு - காஷ்மீரில் பாஜக- பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார்.

    இந்நிலையில் போர்நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜக கூட்டணியில் இருந்து இன்று அதிரடியாக விலகியது. இதைத்தொடர்ந்து மெஹபூபா முப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தபின் மெஹபூபா செய்தியாளர்களை சந்தித்தார்.

    மக்கள் நலனுக்காக கூட்டணி

    மக்கள் நலனுக்காக கூட்டணி

    அப்போது அவர் பேசியதாவது, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிர்ச்சியடையவில்லை. மக்கள் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.

    பெரிய நோக்கம்

    பெரிய நோக்கம்

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆளுநர் வோராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். தன்னிச்சையான சண்டை நிறுத்தம் என்ற பெரிய நோக்கத்தை கொண்டிருந்த கூட்டணி அது.

    பாகிஸ்தான் பயணம்

    பாகிஸ்தான் பயணம்

    பிரதமர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து 11000 இளைஞர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பதவிக்காக தாங்கள் கூட்டணி அமைக்கவில்லை.

    வேறு கூட்டணிக்கு முயலவில்லை

    வேறு கூட்டணிக்கு முயலவில்லை

    காஷ்மீரில் வேறு கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து ஆலோசிக்கவில்லை. இவ்வாறு மெஹபூபா முப்தி பேசினார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் முதல்வர் பதவியை இழந்தவர் மெஹபூபா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Mehbooba, who lost CM post in Kashmir, said she was not shocked by the BJP's withdrawal from the coalition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X