For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சர் பதவிக்கு நாடு முழுவதும் போட்டா போட்டி.. வித்தியாசமாக பேட்டியளித்த சிராக் பாஸ்வான்

Google Oneindia Tamil News

பாட்னா: மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று அமைச்சராகும் எண்ணம் தமக்கு இல்லை என, ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். புதிய அரசின் அமைச்சரவை பட்டியல் மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற நீ நான் என தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன.

I do not have the intention of becoming the Union Minister.. said by Ram Vilas Paswans son

மூத்த பாஜக தலைவர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி உள்ளிட்டோர் தங்களது உடல்நலனை காரணம் காட்டி மத்திய அமைச்சரவையிலிருந்து ஒதுங்கி கொள்வதாக கூறியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஒரு இடத்தில் கூட ஜெயிக்கலை.. ஆனாலும் அமைச்சர் பதவி வேணுமாம்.. இவங்களுக்கு இதெல்லாம் தேவையா?ஒரு இடத்தில் கூட ஜெயிக்கலை.. ஆனாலும் அமைச்சர் பதவி வேணுமாம்.. இவங்களுக்கு இதெல்லாம் தேவையா?

பீகார் மாநிலத்தில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில் பாஜக, ஜேடியு தலா 17 இடங்களிலும், லோக் ஜனசக்தி 6 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் பாஜக 16 இடங்களிலும் ஜேடியு 15 இடங்களிலும் லோக் ஜனசக்தி போட்டியிட்ட 6 இடங்களிலுமே வென்றது. ஆனால் இந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் போட்டியிடவில்லை.

ஆனால் அவரது மகனான சிராக் பாஸ்வான் ஜமுய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மோடியின் கடந்த ஆட்சியின் போது ராம் விலாஸ் பாஸ்வான் அமைச்சராக இருந்தார். தற்போதும் பாஜ கூட்டணியில் இருந்து பீகாரில் அவரது கட்சி தேர்தலை சந்தித்த போதும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

அவருக்கு பதிலாக அவரது மகன் ஜிராக் பஸ்வான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால், மத்திய அமைச்சர் பதவி, ராம்விலாஸ் பஸ்வானின் மகனுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராம்விலாஸ் பஸ்வானே அமைச்சர் பதவியில் தொடர வேண்டும் என்று பாஜ தலைமை விரும்புகிறது.

சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!

ஆனால் அவரோ தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். பாஜக தலைமை இதனை விரும்பவில்லை. இந்நிலையில் செய்தியளாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், தமக்கு மத்திய அமைச்சராகும் எண்ணமோ ஆசையோ இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். லோக் ஜனசக்தி கட்சி ராம் விலாஸ் பாஸ்வானால் தான் அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

மக்களவையில் எனது கட்சியை வழிநடத்துபவனாக இருக்க விரும்புகிறேனே தவிர, மத்திய அமைச்சரவையில் இடம் பெற விரும்பவில்லை என்பதை உறுதியாக தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் தந்தை மகனுக்குள்ளேயே சரியான புரிதல் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

மகன் மத்திய அமைச்சர் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று கூறிவிட்ட நிலையில், மீண்டும் ராம் விலாஸ் பாஸ்வானே மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வான் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், பீகாரில் மாநிலங்களவை பதவி ஒன்றை அவருக்கு அளிக்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை பதவி மூலம் ராம் விலாஸ் பாஸ்வானை மீண்டும் அமைச்சராக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மாலை வெளியாக உள்ள மத்திய அமைச்சரவை பட்டியலுக்காக நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Chirag Paswan, son of Ram Vilas Paswan, has said that he does not intend to become a minister in the Union Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X