For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தல"க்கு தில்லை பாத்தீங்களா... முதல்வர் வேட்பாளரே இல்லாமல்.. பாஜக செம டேக்டிக்ஸ்!

மேற்கு வங்கத்தில் முதல்வர் வேட்பாளர் இல்லாமலேயே பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் முகம் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, யார் முதலமைச்சர் என்பதை அவர்களுக்குள் முடிவு செய்து கொள்வார்களாம்.

விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்க போகிறது.. ஆட்சியை தக்க வைக்க மம்தா பானர்ஜியும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் போராடி வருகின்றனர்.

Ill take decision on CM post after securing majority in West Bengal Polls, says BJP leader

இதில் பாஜக கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது.. மாநில பாஜக நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையிலும் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு வந்து செல்கிறார்கள்.. இதில் அதிகம் ஹைலைட் ஆனவர் மூத்த தலைவர் அமித்ஷாதான்.. அவரது கொல்கத்தா வருகை அன்றைய தினம் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

அங்குள்ள மக்களிடம் மம்தாவை பற்றி குறை சொல்லிவிட்டும் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலுள்ள எம்எல்ஏக்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுதான் மம்தாவுக்கு பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. இருந்தாலும், துரோகம் செய்துவிட்டு கட்சி தாவிய சுவேந்துவின் தொகுதியான அதே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக தில்லாக அறிவித்துவிட்டார் மம்தா.

ஆனால், இவ்வளவு கள வேலை செய்தும், மம்தாவுக்கு குடைச்சல் மேல் குடைச்சல் தந்தும், வங்க ஆபரேஷன் என்ற ஒன்றை உருவாக்கி அதிரடி கிளப்பியும், பாஜக இப்போது வரை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கவே இல்லை.. முதல்வர் வேட்பாளர் இல்லாமலேயே இந்த தேர்தலை சந்திக்கவும் போகிறதாம் பாஜக.

இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா.. தெரியாதா? பாஜக குறித்து திருமாவளவன் பகீர் புகார்இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா.. தெரியாதா? பாஜக குறித்து திருமாவளவன் பகீர் புகார்

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சொல்லும்போது, "முதல்வர் வேட்பாளர் நிலைநிறுத்தி பிரச்சாரம் நடக்காது.. அதனால் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு கட்சி தலைமை மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை செய்து, அதன்பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

அப்படின்னா, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகுதான், அரசியல் "களை" கட்ட போகிறது போலும்!

English summary
I'll take decision on CM post after securing majority in West Bengal Polls, says BJP leader
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X