For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேன்சருடன் போராடும் என் 3.5 வயது செல்ல மகனை காப்பாத்துங்க: மன்றாடும் ஏழை தந்தை

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ரத்த புற்றுநோயுடன் போராடும் 3.5 வயது மகனை காப்பாற்ற நிதியுதவி கேட்டு மன்றாடுகிறார் ஒரு தந்தை.

சேல்ஸ்மேனாக பணியாற்றி வருபவர் சந்தேஷ் கதம். அவரின் மாத வருவாய் ரூ. 8 ஆயிரம். அதில் ரூ.4 ஆயிரம் வீட்டு வாடகைக்கு சென்றுவிடுகிறது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது 3.5 வயது மகன் ஸ்ரீயுடன் பூங்காவில் ஓடிப் பிடித்து விளையாடியுள்ளார்.

அப்போது ஸ்ரீக்கு அதிகமாக மூச்சு வாங்கியுள்ளது. சிறிது நேரத்தில் சிறுவனனின் கைகள், உதடுகள் வெளிறிப் போயுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனுக்கு எலும்பு மஞ்ஞை பரிசோதனை செய்தபோது ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீயின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அல்லாடுகிறார் சந்தேஷ்.

ஸ்ரீக்கு 6 மாதங்கள் கீமோதெரபி கொடுத்தால் புற்றுநோய் குணமாகிவிடும் என்றும், அதற்கு ரூ. 12 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேஷ் தனது மகனின் சிகிச்சைக்காக இதுவரை ரூ. 90 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். தன்னை ஓடி விளையாட விடாமல் படுக்கையில் படுக்க வைத்து ஊசி ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கோபத்தில் சிறுவன் தனது பெற்றோரிடம் பேசக் கூட செய்வது இல்லை.

தனது பொம்மையிடம் தான் மனம் விட்டு பேசுகிறான். அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றிக் கொடுக்குமாறு தயாள குணமுள்ளவர்களிடம் மன்றாடுகிறார் சந்தேஷ். கெட்டோ(Ketto) மூலம் நீங்கள் சிறுவன் ஸ்ரீக்கு உதவி அவன் உயிரை காப்பாற்றலாம்.

English summary
A salesman named Sandesh Kadam is requesting the kind hearted to save his 3.5-year-old son Shree who is struggling with blood cancer. The kid hates to lie in bed all the time and considers doctors as demons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X