For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வந்து வழக்கை எதிர்கொள்ளுமாறு தான் லலித் மோடியிடம் கூறினேன்! சரத் பவார் விளக்கம்!!

Google Oneindia Tamil News

டெல்லி : போர்ச்சுகல் நாட்டிற்கு செல்ல பயண ஆவணங்களை பெறுவதற்கு சுஷ்மா சுவாராஜ் மட்டும் அல்லாது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்த மூத்த அமைச்சர்கள் சிலரும் தனக்கு உதவியதாக லலித் மோடி தெரிவித்திருந்தார்.

மேலும், அரசு இவ்விவகாரத்தில் விசாரணையை துவங்கிய பிறகு தனகு உதவி செய்வதாக சரத் பவாரும் எனக்கு உறுதி அளித்து இருந்தார் என்று லலித் மோடி கூறியிருந்தார்.

sharat pawar

இவ்விவாகரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சரத் பவார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது...

கடந்த 3-4 நான்கு வாரங்களுக்கு முன் லண்டனில் உள்ள உணவு விடுதியில் லலித் மோடியை சந்திதேன். அப்போது, இந்தியாவுக்கு வந்து வழக்கை எதிர்கொள்ளுமாறு அவரிடம் கூறினேன்.

தான் மீண்டும் இந்தியா வந்தால் தனது பாஸ்போர்ட் மறுபடியும் பறிமுதல் செய்யப்படும் என்று அஞ்சுவதாக லலித் மோடி அப்போது என்னிடம் தெரிவித்தார்.

இவ்வாறு சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.

English summary
I Met Lalit Modi in London, Told Him to Return and Face the Law- said Sharad Pawar To a TV Channal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X