For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு!

Google Oneindia Tamil News

போபால்: உங்கள் கழிப்பறைகளையும் சாக்கடையையும் சுத்தம் செய்வது என் வேலை அல்ல என மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாத்வி பிரக்யாவை குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து அவர் பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட அறிவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் அவர் அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் போபால் தொகுதிக்குள்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

எம்பி

எம்பி

அப்போது பாஜக தொண்டர் ஒருவர் தனது தொகுதியின் சுகாதாரமின்மை குறித்து பிரக்யாவிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, உங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் எம்பியாக தேர்வு செய்யப்படவில்லை.

வளர்ச்சி

வளர்ச்சி

அது என் வேலையும் அல்ல. அதை புரிந்து கொள்ளுங்கள். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதை நேர்மையாக செய்வேன். ஒரு எம்பியாக மக்களின் பிரதிநிதிகளான எம்எல்ஏ கவுன்சிலர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து தொகுதியின் வளர்ச்சியாக பணி செய்ய வேண்டும்.

காட்டம்

காட்டம்

உங்களின் குறைகளை அப்பகுதியின் பிரதிநிதிகளை அழைத்து பேசிக் கொள்ளுங்கள். எனக்கு அடிக்கடி போன் செய்து புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும் என காட்டமாக கூறினார்.

கருத்துகள்

இதை கேட்ட பாஜக தொண்டர்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கெனவே தேச தந்தையான காந்தியை பிரக்யா தேச பக்தர் என தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பிரக்யா சொன்ன கருத்துகளால் என்னால் அவரை என்றுமே மன்னிக்கவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sadhvi Pragya Singh Thakur, MP from Bhopal in Madhya Pradesh, said that she was not elected a parliamentarian to "clean toilets and drains" in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X