For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவிலுக்குள் நுழையவிடாமல் என்னை தடுக்க அவர்கள் யார்?: ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் கோபம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் கோவில் ஒன்றுக்குள் நுழையவிடாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தன்னை தடுத்ததாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளா்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் அஸ்ஸாமில் தனக்கு நடந்த சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் அஸ்ஸாம் சென்றிருந்தபோது பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு செல்ல விரும்பினேன். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என்னை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தனர். என்னை தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் யார்?

கேரள முதல்வர் அம்மாநில மக்களின் பிரதிநிதி. கேரள முதல்வர் கேரள மக்களின் குரல் போன்றவர். அத்தகைய குரலை பிரதமர் அவமதித்துவிட்டார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எங்கள் முதல்வரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து பிரதமர் கேரள மக்களை அவமதித்துவிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அங்கு அப்பாவி மக்களை கொலை செய்தார்கள். நடந்தவை எல்லாம் கேரளா, பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார்.

English summary
Rahul Gandi today claimed that he was stopped from entering a temple in Barpeta by RSS workers during his recent visit to Assam, saying this was BJP’s style of politics which was “unacceptable”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X