For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.. தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.. அசாமில் மோடி உற்சாக உரை

Google Oneindia Tamil News

கவுகாத்தி: மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் என்டிஎப்பி இடையே, ஜனவரி 27ம் தேதி, போடோ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் முதல்வர், என்டிஎப்பி அமைப்பின் முக்கிய தலைவர்கள், அசாம் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இன்று அசாம் மாநில அரசு சார்பாக விழா நடந்தது. கோக்ராஜர் நகரில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:

I welcome all those who were part of the Bodo Land Movement and have joined the mainstream: PM Modi

போடோலாண்ட் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து மக்களையும் நான் வரவேற்கிறேன், அவர்கள் வரலாற்றை எழுதியுள்ளனர்.
அசாமில் உள்ள பெரும்பான்மை மக்கள் அமைதி, அஹிம்சை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இந்திய அரசியலமைப்பை அதன் சரியான இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஆஹா.. சுந்திர இந்தியாவில் இப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை.. அசாமில் மோடி வியப்பு! ராகுலுக்கும் குட்டுஆஹா.. சுந்திர இந்தியாவில் இப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை.. அசாமில் மோடி வியப்பு! ராகுலுக்கும் குட்டு

இன்று பல தசாப்தங்களுக்குப் பிறகு, மக்களின் வளர்ச்சிக்கான பாதை மற்றும் இந்த பிராந்தியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போடோலாண்ட் இயக்கத்தில் ஈடுபட்ட அனைவரையும் இந்தியாவின் பிரதான நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.

1993 மற்றும் 2003 இல் கையெழுத்திடப்பட்ட போடோ ஒப்பந்தங்கள், நிரந்தர அமைதியைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், இப்போது கையெழுத்தாகியுள்ள இந்த போடோ ஒப்பந்தத்தில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கோரிக்கை எதுவும் இல்லை.

வட கிழக்கு மாநிலங்கள் முந்தைய அரசுகளால், அலட்சியமாக கையாளப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சியில்தான், இந்த பிராந்தியத்திற்கும் ஒருங்கிணைந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நாங்கள், வட கிழக்கு மாநில மக்களை வெளிநாட்டினர் என்று நினைத்தது இல்லை. இந்த பிராந்தியத்தில், சுற்றுலாத் துறை வளர்ச்சிப்படுத்தப்படும்.

புதிய ரயில் நிலையங்கள், புதிய ஏர்போர்ட்கள் வட கிழக்கு மாநிலங்களில் வரும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

English summary
A lot of people from Assam have accepted peace, ahimsa, and democracy. They have placed the Indian Constitution at its rightful place, says PM Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X