For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மமதா என்னை அறைந்தால், அதை ஆசிர்வாதமாகவே ஏற்பேன்.. மேற்குவங்க பிரச்சாரத்தில் மோடி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: சகோதரி மமதா பானர்ஜி என்னை அறைந்தால் அதனை அவர் எனக்கு வழங்கும் ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்வேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடி மேற்குவங்க மாநிலத்தின், பங்குரா, புருலீயா பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

I will take your slap as blessing:Modi to Mamata

மேற்கு வங்க மாநிலத்தின் பொருளாதாரத்தை மமதா பானர்ஜி அழித்துவிட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, தன்னை அவர் விமர்சிப்பதில் இருந்தே அவருடைய ஏமாற்றம் வெளிப்படையாக தெரிகிறது என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, என்னை பிரதமராக ஏற்க மாட்டேன் என வெளிப்படையாக அறிவிக்கும் மமதா பானர்ஜி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை ஏற்பதற்கு தயாராக உள்ளார்.

என்னை அறைவதாக மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். அவ்வாறு, சகோதரி மமதா தன்னை அறைந்தால், அதனை அவர் வழங்கும் ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

நீங்க தோத்துட்டா.. 100 தடவை 'உக்கி' போடணும்.. ஆஹா.. மோடிக்கு மம்தா வச்ச டெஸ்ட்டைப் பாருங்க! நீங்க தோத்துட்டா.. 100 தடவை 'உக்கி' போடணும்.. ஆஹா.. மோடிக்கு மம்தா வச்ச டெஸ்ட்டைப் பாருங்க!

ஆனால் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள மமதா பானர்ஜி, தான் ஒருபோதும், மோடியை அறைவதாக கூறவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். தனது மொழியாள்கையை மோடி தவறாக புரிந்து கொண்டு, மோடி தன்னை விமர்சிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

English summary
PM Modi has said to Mamata Banerjee in West bengal election campaign that I will take your slap as blessing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X