For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்.. கபில் சிபல் சபதம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்..

    டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளின் எம்பிக்கள் ராஜ்ய சபாவில், வெங்கையா நாயுடுவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளித்தனர். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்று காலை இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

    I wont appear in Supreme court till CJI Deepak Misra retires says, Kapil Sibal

    இந்த நோட்டிஸ் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியே வந்துள்ளது. இது சட்டத்திற்கு முரணானது என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளிப்பதில் மிக முக்கியமான காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில் ''இனி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன். அவர் எத்தனை நாள் பதவியில் இருக்கிறாரோ அது வரை உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன். என்னுடைய வேலைக்கு நான் செலுத்தும் மரியாதை அதுதான்'' என்று கூறியுள்ளார்.

    மேலும் ''அவர் மீது விசாரணை வந்து, அது நடந்து கொண்டு இருந்தாலும், அவர் பதவியைவிட்டு இறங்கும்வரை நான் உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன்'' என்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    I won't appear in Supreme court till CJI Deepak Misra retires says, Kapil Sibal. He also added that not attending Misra's court is the basic standard for his job.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X