For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30 எம்எல்ஏக்கள் என் பக்கம்.. காங். மீட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன்.. மௌனம் கலைத்த சச்சின் பைலட்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: இன்று ராஜஸ்தானில் நடக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சச்சின் பைலட் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அங்கு துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெஹ்லட் இடையே பல நாட்களாக நீடித்து வந்த மோதல் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதன்படி சச்சின் பைலட் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆட்சிக்கு எதிராக திரும்பி டெல்லியில் இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது. இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் வகையில் இன்று ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது.

109 எம்எல்ஏக்கள் சப்போர்ட்.. ராஜஸ்தானில் ஆட்சி கவிழாது.. அதிகாலை 2.30 மணிக்கு காங். அளித்த பேட்டி! 109 எம்எல்ஏக்கள் சப்போர்ட்.. ராஜஸ்தானில் ஆட்சி கவிழாது.. அதிகாலை 2.30 மணிக்கு காங். அளித்த பேட்டி!

தொடர் மௌனம்

தொடர் மௌனம்

இத்தனை பிரச்சனைக்கும் இடையில் சச்சின் பைலட் இதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார். தற்போது முதல்முறையாக அவர் மௌனம் கலைத்து உள்ளார். இது தொடர்பாக சச்சின் பைலட் வெளியிட்டுள்ள அறிக்கையில். இன்று ராஜஸ்தானில் நடக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன். எம்எல்ஏக்கள் ஆதரவு எனக்கு மட்டும்தான் இருக்கிறது.

எண்ணம் இல்லை

எண்ணம் இல்லை

ஜெய்பூர் திரும்பி செல்லும் எண்ணம் இப்போது இல்லை. டெல்லியில்தான் இருக்க போகிறேன். முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கு பெரிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களிடம் பேச முயன்றும் பேச முடியவில்லை. இரண்டு பேரும் என் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை.

பெரும்பான்மை இல்லை

பெரும்பான்மை இல்லை

ராஜஸ்தானில் அசோக் கெஹ்லட் ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆட்சிக்கு அங்கு எம்எல்ஏக்கள் மற்றும் மக்கள் ஆதரவு இல்லை . எனக்கு 30 எம்எல்ஏக்கள் வரை ஆதரவு தருகிறார்கள் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து ராஜஸ்தான் அரசியலை உலுக்கி உள்ளது.

பாஜக இணைகிறார்?

பாஜக இணைகிறார்?

இதனால் சச்சின் பைலட் பாஜகவில் இணைய போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்று சச்சின் பைலட் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ பி நட்டாவை சந்திக்க போகிறார் என்று கூறுகிறார்கள். இன்று நடக்கும் சந்திப்பில் அவர் பாஜகவில் 20-30 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஐக்கியம் ஆக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

English summary
Majority MLA's are with me, I won't go to Congress MLA meet today says Sachin Pilot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X