For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்!

ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை எப்போதுமே பாதுகாப்பாக இருக்கிறது அதனால் எங்களை சீண்டி பார்க்க வேண்டாம் இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Air Force Chief Dhanoa Pressmeet : பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்!- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை எப்போதுமே பாதுகாப்பாக இருக்கிறது அதனால் எங்களை சீண்டி பார்க்க வேண்டாம் இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

    இரண்டு வாரம் முன் யாருமே எதிர்பார்க்காத வகையில் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.இதையடுத்து இந்தியாவுடன் அனைத்து விதமான உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    இந்தியாவுடன் இனி எந்த விதமான உறவும் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எல்லையில் இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் பாகிஸ்தான் தொடர்பாக இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவ் அளித்த பேட்டியில், இந்திய விமானப்படை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறது. நாங்கள் எல்லையில் மிகவும் கவனமாக பாதுகாப்பாக இருக்கிறோம். எல்லையில் எதிரிகள் இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கள் தயார் நிலையில் இருப்போம்.

    பயணிகள் விமானம்

    பயணிகள் விமானம்

    இந்திய எல்லையில் சாதாரண பயணிகள் விமானம் கடந்தால் கூட அதன் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம். அதை நாங்கள் கூர்மையாக பார்ப்போம். அதையும் கண்காணிப்பதுதான் எங்கள் நோக்கம். இப்படி நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்போம்.

    சர்ஜிக்கல்

    சர்ஜிக்கல்

    அதனால் எங்களிடம் மோதுவது தவறு. அண்டை நாட்டில் நாங்கள் இந்த வருட தொடக்கத்தில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினோம். அதுவே இந்திய ராணுவத்தின் பலத்தை உலகிற்கு எடுத்து காட்டும். நாம் எந்த அளவிற்கு பலமாக இருக்கிறோம் என்பது இப்போது பலருக்கும் தெரிந்து இருக்கும்.

    விமானப்படை

    விமானப்படை

    விமானப்படையில் புதிய ஆயுதங்கள் விமானங்களை இந்தியா உருவாக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். அதுவரை வெளிநாட்டில் இருந்து நாம் ஆயுதங்களை வாங்க வேண்டும். அதை வைத்து நமது பாதுகாப்பை உறுதி செய்து பின் நாம் சுயமாக ஆயுதங்களை உருவாக்க வேண்டும், என்று இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவ் தெரிவித்துள்ளார்.

    English summary
    IAF always alert along India's border says Air Force chief Dhanoa to press.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X