For Quick Alerts
For Daily Alerts
Just In
ம.பி.: குவாலியர் அருகே விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானிகள் உயிர் தப்பினர்
குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படையின் மிக் 21 ரக விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
குவாலியர் அருகே விமானப் படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானிகள் விமானத்தை இயக்குவதற்கு போராடினர். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பாதுகாப்பு கருவிகளுடன் குதித்து உயிர் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக விமானப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.