For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் மிக் 17 ஹெலிகாப்டர் விபத்தில் திருப்பம்.. இந்திய வீரர்களே தவறுதலாக சுட்டது அம்பலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் மிக் 21 ரக விமானம் வெடித்து விபத்து

    ஸ்ரீநகர்: இந்திய விமானப் படையின் மிக் - 17 ஹெலிகாப்டர் விபத்தில் திடீர்திருப்பமாக இந்திய வீரர்களே தவறுதலாசு சுட்டது நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    இந்திய விமானப் படையின் மிக் - 17 ஹெலிகாப்டர் ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

    வழக்கமான பறக்கும் நடவடிக்கைக்காக புதன்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீநகர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் 10.10க்கு பட்காம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது அதில் இருந்த 6 விமானப் படை வீரர்களும் இறந்துவிட்டனர். இதேபோல் ஹெலிகாப்டர் விழுந்ததால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த காஷ்மீரை சேர்ந்த கிபாயத் ஹூசேன் கனாயே என்பவரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    இந்திய வீரர்களின் தவறு

    இந்திய வீரர்களின் தவறு

    முன்னதாக பாகிஸ்தானின் பால்கோட்டில் இந்தியா பிப்ரவரி 27ம் தேதி தாக்குதல் நடத்தியதால் மறுநாளே பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியதால் விபத்து நடந்ததாக தகவல்கள் பரவியது. ஆனால் இந்திய விமானப்படை இதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர்களே தவறுதால் ஏவுணை மூலம் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தான் விமானம்

    பாகிஸ்தான் விமானம்

    இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் வழக்கமாக ஸ்ரீநகர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரை அந்த அதிகாரி முதலில் அழைத்துள்ளார். அப்போது எந்த ஹெலிகாப்டரும் வரவில்லை என தகவல் வந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குல் நடத்தும் என்ற உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் தான் இந்திய ஹெலிகாப்டர் தரையிறங்க வந்துள்ளது. அதைத்தான் இந்திய வீரர்கள் தவறுதலாக சுட்டது தெரியவந்துள்ளது.

    யாரோ திருடி விட்டார்கள்

    யாரோ திருடி விட்டார்கள்

    இந்நிலையில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டி கிடைத்தால் முழு உண்மையும் தெரியவரும் என்ற நிலையில் அந்த கருப்பு பெட்டியை யாரோ திருடிசென்றுவிட்டார்கள்.

    5 பேர் மீது குற்றவாளிகள்

    5 பேர் மீது குற்றவாளிகள்

    இந்த சூழலில் தான் விமானப்படை நீதிமன்றம் நடத்திய விசாரணைக்கு பின் 5 விமானப்படை வீரர்கள் தவறுதலாக ஏவுகணை மூலம் தாக்கி சொந்த நாட்டு ஹெலிகாப்டரை வீழ்த்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 5 விமானப்படை வீரர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர்களுக்கான தண்டனையை விமானப்படை தலைமையகம் விரைவில் அறிவிக்க உள்ளது.

    நடைமுறைகளை பின்பற்றவில்லை

    நடைமுறைகளை பின்பற்றவில்லை

    ஒரு கேப்டன் இரண்டு விங் காமாண்டர்கள், இரண்டு விமான லெப்டினட்கள் ஆகியோரின் அலட்சியமாக இருந்ததுடன் நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் ஏர் மார்ஷல் ஹரி குமார் மேற்கு விமான கட்டளைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது-

    English summary
    IAF probe finds five officers guilty over February 27 Budgam chopper crash, The helicopter was shot down by an Indian missile
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X