For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாகசங்களில் பறந்து, பறந்து அசத்தும் “சாரங்” – ஏரோ இந்தியா வான்வெளி சாதனைகள்

Google Oneindia Tamil News

-குரூப் கேப்டன் டி.கே.சிங்கா

பெங்களூரு: விமானக் கண்காட்சிகள் பொதுவாக வர்த்தகம் தொடர்பான கூட்டங்களாகவும், ராணுவத் தளவாட அணிவகுப்பாகவும் மட்டுமே இருப்பது வழக்கம்.

ஆனால் ஏரோ இந்தியா ஷோவானது ஆண்டுக்கு ஆண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் கண்காட்சியாக மாறி வருகிறது.

தரையிலும், வானிலும் நடத்தப்படும் இந்த சாகசங்கள் கண்காட்சிக்கு அழகூட்டுகின்றன.

ஏரோ இந்தியா 2015:

ஏரோ இந்தியா 2015:

ஏரோ இந்தியா 2015 ஷோ அனைவரையும் கவர்ந்துள்ளதுடன், பலரையும் பாராட்டி பேச வைத்துள்ளது.

புகழ்பெற்ற ஏரோபேட்டிக்ஸ் அணிகள்:

புகழ்பெற்ற ஏரோபேட்டிக்ஸ் அணிகள்:

இதிலும் உலகப் புகழ் பெற்ற ஏரோபேட்டிக்ஸ் அணிகளான அமெரிக்காவின் பிரெய்ட்லிங் விங்வாக்கர்ஸ், ஸ்கேன்டினேவியன் குழு, செக் நாட்டின் பிளையிங் புல்ஸ், இங்கிலாந்தின் யாக்வ்லவஸ் பார்மேஷன் ஆகியோரும் சாகசம் செய்ய வந்திருக்கின்றனர்.

இளம் பைலட்கள் அமர்க்களம்:

இளம் பைலட்கள் அமர்க்களம்:

இந்த வரிசையில் இந்தியாவின் சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவும் இடம் பெறுகிறது. இந்திய விமானப்படையின் இளம் ஹெலிகாப்டர் பைலட்டுகள் அடங்கிய சாகசக் குழுதான் சாரங். இவர்கள் சாகசம் செய்ய வானில் புகுந்து விட்டாலே வானமே அதிரும்.. வண்ணமயமாக ஜொலிக்கும்.

உலக அளவில் இரண்டுதான்:

உலக அளவில் இரண்டுதான்:

உலக அளவில் ஹெலிகாப்டர் சாசகக் குழுக்கள் இரண்டுதான் உள்ளன. ஒன்று நமது சாரங், இன்னொன்று இங்கிலாந்து ராணுவத்தின் ப்ளூ ஈகிள்ஸ்.

2002ம் ஆண்டின் உருவாக்கம்:

2002ம் ஆண்டின் உருவாக்கம்:

கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பெங்களூரில் உள்ள விமானம் மற்றும் சிஸ்டம்ஸ் சோதனை நிறுவனத்தில் இந்த சாரங் குழு உருவாக்கப்பட்டது. அப்போது இருந்த அட்வான்ஸ்ட் இலகுரக ஹெலிகாப்டரை வைத்து இந்த டீமை உருவாக்கினர்.

மயில்தோகை விரிக்கும் ஹெலிகாப்டர்கள்:

மயில்தோகை விரிக்கும் ஹெலிகாப்டர்கள்:

சாரங் என்றால் சமஸ்கிருதத்தில் மயில் என்று பொருள் வரும். மயில் போல இந்த ஹெலிகாப்டர்களும் வண்ணம் பூசி ஜொலிக்கும். எங்கிருந்து பார்த்தாலும் இந்த வான மயில் வானில் செய்யும் நர்த்தனம் மனதைக் கொள்ளை கொள்ளும்.

அழகான விவரிப்பு:

அழகான விவரிப்பு:

இதுகுறித்து சாரங் குழு தலைவர் விங் கமாண்டர் அபயங்கர் கூறுகையில், "மயிலின் அழகை வெளிப்படுத்தும் வகையிலான டிஸ்பிளேவாக இது இருக்கும் என்றார்.

கமாண்டரான இளம் பைலட்:

கமாண்டரான இளம் பைலட்:

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏரோ இந்தியா ஷோவில் இளம் பிளைட் லெப்டினென்ட்டாக அபயங்கர் இந்த சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். தற்போது கமாண்டராக வந்துள்ளார்.

சிங்கப்பூரில் முதல் சாகசம்:

சிங்கப்பூரில் முதல் சாகசம்:

2004 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆசிய ஏரோஸ்பேஸ் ஏர் ஷோவில்தான் சாரங் குழு தனது முதல் நிகழ்சசியை நடத்தியது. அதன் பின்னர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 35 நிகழ்ச்சிகளை அது நடத்தியுள்ளது. அதில் 2005 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு தூதரகத்தில் நடந்த சாகசம்தான் உலக அளவில் அதற்குப் பெரும் பெயரை ஈட்டித் தந்தது.

சிறந்த டீமாக தேர்வு:

சிறந்த டீமாக தேர்வு:

பெர்லினில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஷோவின்போது, பெஸ்ட் லுக்கிங் குளோஸ் பார்மேஷன் டீம் என்ற சிறப்பு கிடைத்தது. ஐந்து ஹெலிகாப்டர்கள் மூலம் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து வரை ஆங்கிலக் கால்வாயை இந்தக் குழுவினர் ஒரு சேர கடந்து அசத்தினர்.

சாரங்கின் புதிய சாகசங்கள்:

சாரங்கின் புதிய சாகசங்கள்:

இந்த வருட பெங்களூரு ஏரோ இந்தியா ஷோவில் இன்வர்ட்டட் ஒயின் பாட்டில் பார்மேஷன் என்ற புதிய முறையில் சாரங் குழு சாகசம் செய்யவுள்ளது. மேலும் லைன் ஆஸ்டெரன், வைரம் போன்ற வடிவிலும் இவர்கள் சாகசம் செய்யவுள்ளனர்.

டால்பின் லீப் சாகசம்:

டால்பின் லீப் சாகசம்:

டால்பின் லீப் சாகசமும் இடம் பெறவுள்ளது. அதேபோல மேலும் பல சாகசங்களையும் இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

குழுவின் கமாண்டர்கள்:

குழுவின் கமாண்டர்கள்:

சாரங் குழுவில், விங் கமாண்டர்கள் வினோத் நேகி, சரவணவேல், பொன்னப்பா, ஸ்குவாட்ரன் லீடர்கள் கோமர், பவார், மிஸ்ரா, மிலின்ட் லோதே, டாய்ஸ், பர்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரே ஒரு பெண் பைலட்:

ஒரே ஒரு பெண் பைலட்:

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் பைலட் தீபிகா மிஸ்ராதான். இவர்தான் முதல் பெண் பைலட்டும் கூட.

தயார் செய்யும் குழுவினர்:

தயார் செய்யும் குழுவினர்:

சாரங் ஹெலிகாப்டர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான குழுவில் விங் கமாண்டர் தருந்தீப் பூரி, ஸ்குவாட்ரன் லீடர்கள் செளரப் கக்கர், ஜாய்தீப், பரத் பஜாஜ், சந்தன் குமார், சந்தீப் டிவேட்டியா ஆகியோரும் உள்ளனர்.

பெருமைக்குரிய கமெண்ட்ரி:

பெருமைக்குரிய கமெண்ட்ரி:

விங் கமாண்டர் பாவனா மேஹ்ரா, குழுவின் நிர்வாகியாக மட்டும் இல்லாமல் கமெண்டரியும் தருகிறார். இவர் சாரங் ஹெலிகாப்டர் குழுவின் கமெண்டரியை மட்டும் தந்தவரில்லை. மாறாக முந்தைய சூர்யகிரண் ஏரோபேட்டிக் குழுவின் சாகசத்திற்கும் கமெண்டரி கொடுத்த பெருமைக்குரியவர் ஆவார்.

English summary
Air shows are essentially about business meetings and exhibits of military hardware and merchandise. But over the years the reputation of Aero India, now into its tenth edition has also been assiduously built by magnificent displays – static and aerial – by both civil and military aircraft, including participation by famed aerobatic teams from around the world enthralling audiences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X