For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் 17 ஆண்டு இழுபறிக்கு தீர்வு: மோடிக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தீர்வு கண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரான்சில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது.

IAF will induct Rafale fighter jets within 2 years, says Defence Minister Parrikar

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறுகையில், ரஃபேல் ரக விமானத்தை வாங்கும் முடிவை எடுத்தது மத்திய அரசின் மிகச் சிறந்த முடிவு.

17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரதமர் தீர்வு கண்டுள்ளார். தற்போதைய நிலையில் விமானப்படைக்கு வலுசேர்க்கவும், நிலையை மாற்றவும் ரஃபேல் விமான கொள்முதல் ஏதுவாக அமையும்.

36 ரஃபேல் விமானங்களும் விமானப் படைக்கு அடுத்த 2 ஆண்டுகளில் அர்ப்பணிக்கப்படும் என்றார்.

English summary
Defence Minister Manohar Parrikar on Saturday lauded Prime Minister Narendra Modi for a new Rafale fighter deal with France.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X