For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... செப்.1 முதல் தட்கல் முன்பதிவிற்கு ஐடி கார்ட் தேவையில்லை!

Google Oneindia Tamil News

டெல்லி: செப்டம்பர் 1ம் தேதி முதல் தட்கல் முன்பதிவின் போது அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்கத் தேவையில்லை என ரயில்வே அறிவித்துள்ளது.

தட்கல் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் அடையாள அட்டையின் நகலை முன்பதிவு விண்ணப்படிவத்தோடு சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழக்கம் தற்போது உள்ளது. மேலும், அதே அடையாள அட்டையையே பயணம் செய்யும் போதும் டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.

இதற்கு மாறாக டிக்கெட் பரிசோதகர்களிடம் வேறு சான்றைக் காண்பித்தால், அதற்கு அபராதம் விதிக்கப் படும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

Identity proof not needed from Sept 1 to book Tatkal tickets

இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டை ரயில்வே கவுண்டர்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டையின் நகல் அல்லது அடையாள அட்டை எண் வழங்க தேவையில்லை என ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால், பயணம் செய்யும் போது கட்டாயம் பயணிகள் தங்களது அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.

English summary
Passengers booking tatkal train tickets would not be required to produce identity proof anymore as Railways have decided to discontinue with this provision. The modified provision could come into effect by September 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X