For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல் குரு தியாகின்னா, வீரர் ஹனுமந்தப்பா யார்?: குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத்

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தியாகி என்றால் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான ஹனுமந்தப்பாவை எப்படி அழைப்பீர்கள் என்று குத்துச் சண்டை வீரர் யோகேஷ்வர் தத் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அப்சல் குருவை தியாகி என்று தெரிவித்தனர்.

மேலும் அப்சல் குருவின் புகழ்பாடியும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள் சங்க தலைவர் கன்ஹையா குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத் ட்விட்டரில் இந்தி மொழியில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தீவிரவாதி அப்சல் குரு தியாகி என்றால் சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி மருத்துவமனையில் மரணம் அடைந்த வீரர் ஹனுமந்தப்பாவை எப்படி அழைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாரத தாயை மக்கள் அவமதிப்பது எந்தவகையான கருத்து சுதந்திரம் என்று அவர் மேலும் கேட்டுள்ளார்.

அவரது ட்வீட்டை பார்த்த பலரும் அவரை பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர்.

English summary
Famous wrestler posted a poem on twitter asking, If Afzal Guru a martyr, who was Lance Naik Hanumanthappa?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X