For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கலத்தோட வந்தால் வீடு, கார் பரிசு.. வைர வியாபாரி அசத்தல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

காந்திநகர்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி பெண்கள் அணி பதக்கத்தை பெற்றால் அவர்களுக்கு காரும் வீடும் பரிசளிப்பதாக குஜராத் மாநிலம் வைர வியாபாரி சவ்ஜி தோலாகியா தெரிவித்துள்ளார்.

ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கின. இந்த போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை திரிபுரா மாநிலத்தின் மீராபாய் சானு உறுதி செய்தார். அவர் வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பினார்.

இந்தியா

இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி, 3 வெண்கலங்களை பெற்றுள்ளது. இன்றைய தினம் இந்திய ஆண்கள் அணி சார்பில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்கள். இந்த நிலையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டு அரையிறுதி போட்டியில் நுழைந்துள்ளது. நேற்றைய தினம் அர்ஜென்டினாவை எதிர்கொண்ட இந்திய அணி கடுமையாக போராடி தோல்வியடைந்தது.

வெண்கலத்திற்கான போட்டி

வெண்கலத்திற்கான போட்டி

இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதும். இந்த போட்டியில் இந்திய ஹாக்கி பெண்கள் அணி வெண்கலம் வென்றால் அவர்களுக்கு வீடும், காரும் பரிசாக தருவதாக குஜராத் மாநில வைர வியாபாரி சவ்ஜி தோலாகியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எங்களது எச்கே (ஹரிகிருஷ்ணா க்ரூப்) குரூப் சார்பில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியினருக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளோம்.

வீடு கட்ட விரும்புகிறவர்கள்

வீடு கட்ட விரும்புகிறவர்கள்

அதன்படி வீடு கட்ட விரும்பும் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எங்கள் நிறுவனம் சார்பில் ரூ 11 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும். அது போல் ஏற்கெனவே வீடிருக்கும் வீராங்கனைகளுக்கு ரூ 5 லட்சம் மதிப்பிலான புதிய கார் வழங்கப்படும். ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதல் முறையாக அரையிறுதிக்கு சென்றோம். டோக்கியோவில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்களது ஒவ்வொரு செயலிலும் வரலாற்றை படைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Recommended Video

    India Lose Bronze Medal Match to Great Britain 3-4 | Olympics
    அமெரிக்க டாக்டர்

    அமெரிக்க டாக்டர்

    அது போல் சவ்ஜியின் நண்பரின் சகோதரர் டாக்டர் கமலேஷ் தேவ், வெற்றியாளர்கள் அனைவருக்கும் ரூ 1 லட்சம் பரிசாக கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்தியர்களே அனைவரும் நமது போட்டியாளர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என சவ்ஜி தனது ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    Gujarat Diamond merchant Savji Dholakia says that If Women hockey team wins medal in Tokyo olypics, he will offer house and car to them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X