For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் பணியை சரியா செய்யலன்னா சட்டையை கிழிச்சு என் மகனை தூக்கி போடுங்க.. கமல்நாத் பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சிந்த்வாரா: என் மகன் தேர்தலில் வெற்றி பெற்று சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி, உங்களது கண்ணீரை துடைக்காவிட்டால் அவனது சட்டையை கிழித்து நீங்கள் தூக்கி எறியலாம் என மத்தியபிரதேச மாநில முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் ஆவார் இவர் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள நகுல்நாத், பாஜக வேட்பாளர் நாதன்ஷாவை எதிர்த்து முதல்முறையாக அரசியலில் குதித்துள்ளார்.

If my son does not work properly, tear him shirt and throw away .. Kamalnath talk

இந்நிலையில் தனது மகனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்நாத், 9 முறை இந்த தொகுதியில் நான் எம்.பி-யாக வெற்றி பெற்று சேவை செய்துள்ளேன். இந்த முறை சிந்த்வாரா தொகுதி மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய என் மகன் நகுல்நாத்தை அரசியலில் களமிறக்கியுள்ளளேன்.

மக்களாகிய உங்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை, நான் நகுல்நாத்துக்கு வழங்கியுள்ளேன். ஒருவேளை அவர் தனது பணியை சரியாக செய்யாது போனால், அவரது சட்டையை கிழித்து பணிபுரிய சொல்லுங்கள் அல்லது தூக்கி எறியுங்கள் என்றார்.

நான் பிரதமர் மோடிக்கு ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இத்தேர்தலின் முடிவில் பாமர மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அப்போது உங்களுடைய ஆட்சி முடிந்திருக்கும் என்றார். விவசாயிகளை வயிற்றில் எட்டி உதைத்து, அவர்களின் மார்பில் துப்பாக்கியை வைத்தது உங்கள் அரசு என்று சாடினார்.

நான்தான் பாபர் மசூதியை இடித்தேன்.. அதை நான் பெருமையாக கருதுகிறேன்.. பாஜக வேட்பாளர் சாத்வி பகீர்! நான்தான் பாபர் மசூதியை இடித்தேன்.. அதை நான் பெருமையாக கருதுகிறேன்.. பாஜக வேட்பாளர் சாத்வி பகீர்!

நான் இதுவரை மத்தியபிரதேசத்தில் 22 லட்சம் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளேன். அதே போல உறுதியளித்த படி,போபாலில் நாங்கள் பொறுப்பேற்றவுடன் விரைவில் விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்வோம் இதனால் ரூபாய் 2 லட்சம் வரை கடன் பெற்றுள்ள முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்றார்.

மத்தியபிரதேச மாநில அரசை தொடர்ந்து நடத்த சட்டமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்பதற்காக, தற்போது முதல்வராக உள்ள கமல்நாத்தும் சிந்த்வாரா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே தான் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் தனது மகனை களமிறக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Nath has said that if my son not fullfill promises after wining electionyou can throw him off his shirt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X