For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயனாளிகள் தொடர்ந்து 3 மாதம் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால்... மத்திய அரசு அதிரடி!

தொடர்ந்து மூன்று மாதம் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 மாதம் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால்...குடும்ப அட்டை ரத்து- வீடியோ

    டெல்லி: தொடர்ந்து மூன்று மாதம் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு பின் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசினார்.

    If the ration card is not used for 3 months it will be canceled: Union Minister Ramvilas baswan

    அப்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். உரிய பயனாளிகளுக்குத்தான் சலுகைகள் போய் சேருகிறதா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

    மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும்.

    மேலும், இதனால் பட்டினிச் சாவு ஏற்படாமல் மக்களுக்கு உணவு தானியங்களை கிடைக்கச் செய்ய முடியும். ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

    English summary
    If the ration card is not used for 3 months it will be canceled says union Minister Ramvilas baswan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X