For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டத்தை இன்னும் கடுமையாக்குவோம்.. ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

Google Oneindia Tamil News

மிர்சாபூர்: மக்களவை தேர்தலில் வென்று பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சார கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது அக்கட்சி தேச பாதுகாப்பில் கொண்டுள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கி கொன்றதற்கு பதிலடியாக நமது வீரர்களால் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

 If we come back to power, we will make the Sedition Law more Make Stringent.. Rajnath Singh campaign

ஆனால் காங்கிரஸ் கட்சியோ பதிலடி கொடுத்ததை எண்ணி பார்க்காமல் , இத்தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என எண்ணிக்கையை கேட்கின்றனர். எண்ணிக்கையால் எடை போட கூடிய விஷயமாக வீரத்தை நினைக்கிறது காங்கிரஸ் என கடுமையாக சாடினார்.

ஆனால் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது இருப்பதை விட தேசத் துரோக சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும். அப்படி கடுமையாக்கிவிட்டால் அச்சட்டத்தை மீறி செயல்படும் தைரியம் யாருக்கும் வராது என குறிப்பிட்டார்.

வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை.. பாஜகவிற்கு குஷியோ குஷி.. கவலையில் மமதா.. இதுதான் காரணம்! வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை.. பாஜகவிற்கு குஷியோ குஷி.. கவலையில் மமதா.. இதுதான் காரணம்!

நேரு முதல் சோனியா காந்தி வரை மக்களின் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை தான் காலங்காலமாக கூறி வருகின்றனர் தற்போது ராகுலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கை கண்டு அஞ்சியே பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள், கூட்டணி அமைத்துள்ளன என்றார்

2004 மற்றும் தற்போதைய மக்களவை தேர்தல்களில் நாட்டின் பணவீக்கத்தை முன் வைத்து எவ்வித தேர்தல் பிரச்சாரங்களும் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த இரண்டு கால கட்டங்களிலும் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களே பிரதமராவார்கள். எனவே பணவீக்கத்தை கட்டுக்குள்ளேயே அவர்கள் வைத்திருந்தனர் என முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் தற்பாதைய பிரதமர் மோடியையும் ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசினார்

English summary
If the Bharatiya Janata Party comes to power again,Sedition law tightened further said by Rajnath singh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X