For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்! மேலும் கால நீட்டிப்புக்கு சான்ஸ் இல்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்னை இணைக்க உத்தரவு பிறப்பித்து, ஜூலை, 31க்குள் இணைக்க வேண்டும் என கூறியிருந்தது.

If you don't link Aadhaar, PAN by Aug 31, your ITR won't be processed

ஆனால், ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, , பலர் அதை ஜூலை, 31க்குள் செய்ய முடியவில்லை.

எனவே ஆகஸ்ட் 31ம் தேதிவரை கால அவகாசம் கொடுத்தது மத்திய அரசு. எனவே இன்றுடன் இதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. இதற்கு மேலும் காலக்கெடுவை நீடிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காவிட்டால் அவர்களின் வருமான வரித் தாக்கலை வருமான வரித்துறை பரிசீலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் முதல் வணிகங்கள் வரை தற்போது பான்கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. விலைமதிப்புள்ள பொருட்களான தங்கம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பான்கார்டுகள் அவசியமாக்கப்பட்டுள்ளது.

English summary
The Income Tax department has clarified that the deadline to link PAN with Aadhaar for taxpayers is unlikely to be extended beyond August 31, 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X