For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க "கஜினி ஸ்டைலில்" ராணுவத்தில் சேரப் போறீங்களா.. ஸாரி பாஸ் உங்களுக்கு "வேலை" கிடைக்காது

Google Oneindia Tamil News

டெல்லி: உடம்பில் எந்த இடத்திலாவது டாட்டூ அல்லது பச்சை குத்தியிருந்தால் ராணுவத்தில் சேரும் வாய்ப்பை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

ராணுவத்தில் சேருவதற்கான புதிய விதிமுறைகளில் இதையும் தற்போது சேர்த்துள்ளனர். அதாவது உடம்பில் பச்சை குத்தியிருந்தால் ராணுவத்தில் எடுக்க மாட்டார்களாம்.

இந்திய ராணுவத்தில் சேருவதை பெருமையாக நினைப்போர் அதிகம். அதிலும் இளைஞர்களின் கனவாக ராணுவம் உள்ளது. இந்த நிலையில் அதில் சேருவதற்கு முன்பு புதிய விதிமுறைகளை நமது இளைஞர் சமுதாயம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ராணுவத்தில் சேருவதற்கான சில புதிய விதிமுறைகளை இங்கு பார்ப்போம்.

டாட்டூ உள்ளதா...

டாட்டூ உள்ளதா...

கமிஷன்ட் ஆபீசர் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களது உடலில் எங்காவது பச்சை அல்லது டாட்டூ உள்ளதா என்பதை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

மனு நிராகரிக்கப் படும்...

மனு நிராகரிக்கப் படும்...

குறிப்பிட்ட அளவிலான டாட்டூக்கள் அல்லது பச்சைகள் அனுமதிக்கப்படுமாம். அதைத் தாண்டி பச்சை அல்லது டாட்டூ இருந்தால் அந்த விண்ணப்பதாரரின் மனு உடனடியாக நிராகரிக்கப்படுமாம்.

உறுதியளிக்க வேண்டும்...

உறுதியளிக்க வேண்டும்...

மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிலான டாட்டூ அல்லது பச்சை குத்தியிருப்போர், வேலையில் சேர்ந்த பின்னர் புதிய டாட்டூ குத்த மட்டோம் என உறுதியளித்து எழுதித் தர வேண்டுமாம்.

பழங்குடி மக்கள்...

பழங்குடி மக்கள்...

பழங்குடியினர் மத்தியில் பச்சை குத்துவது என்பது அதிக அளவில் உள்ளது என்பதால் அவர்களுக்கான அளவை மற்றவர்களை விட அதிகமாக வைத்துள்ளனர். அதேசமயம், அவர்களும் கூட புதிதாக பச்சை குத்த அனுமதிக்கப்பட மாட்டார்களாம்.

தழும்பு...

தழும்பு...

அதேசமயம் ஏற்கனவே பச்சை குத்தியிருந்து அதை அழிக்க நடவடிக்கை எடுத்தால், அதைத் தழும்பு வரிசையில் அதிகாரிகள் சேர்ப்பார்களாம்.

அநாகரீகச் செயல்...

அநாகரீகச் செயல்...

டாட்டூ என்பது அநாகரீகச் செயலாக ராணுவம் கருதுதவதே இந்த கெடுபிடிக்கு முக்கியக் காரணமாகும். மேலும் இன ரீதியாக ஒருவரை அடையாளம் காணவும் டாட்டூ பயன்படுவதாகவும் ராணுவம் கருதுகிறது.

இது தான் அளவு...

இது தான் அளவு...

ராணுவம் அறிவித்துள்ள டாட்டூவின் அளவு 5×3 என்பதாகும். இந்த அளவில் டாட்டூ இருந்தால் பிரச்சினை இல்லையாம். கூட போனாலதான் நிராகரிக்கப்படுவார்களாம்.

English summary
Getting into the Indian Army is such a matter of pride among Indian youth since it is considered to be one of the revered jobs in the country. Apparently, Army has said a big resounding NO to the potential officers having offensive tattoos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X