For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமானநிலையம் முதலிடம்

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் சர்வதேச விமான நிலைய கவுன்சில் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : சர்வதேச விமான நிலைய கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப்படி, டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் உலகளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பரப்பளவு மற்றும் பயணிகள் வந்து செல்லும் விகிதத்தின் அடிப்படையில் விமான நிலையங்கள் சேவைத் தரம் ஆண்டுதோறும் ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

igia adjudged best airport in the world

அந்தவகையில், இந்தாண்டு தரவரிசைப்பட்டியலில் ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு 60 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கடந்தாண்டு இந்தப் பட்டியலில் டெல்லி விமான நிலையம் இரண்டாம் இடத்திலும், தென்கொரியாவின் இன்சியான் விமான நிலையம் முதலிடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டுப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் தைவானின் தைபேய் நகர விமான நிலையமும் உள்ளன.

English summary
Delhi’s Indira Gandhi International Airport (IGIA) has been adjudged as the best airport in the world according to the latest Airport Service Quality (ASQ) 2017 rankings released by the Airports Council International, helping it overtake Incheon in South Korea which was ranked number one last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X