For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியை ஆண்மையற்றவர் என்றே தொடர்ந்து சொல்வேன்: ராகுல் பேச்சை மீறி குர்ஷித் பிடிவாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக அறிவித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர். வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார்' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Ignoring Rahul Gandhi, Salman Khurshid stands by his 'impotent' remark

பாஜக பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள மோடி குறித்து இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர்கள் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசுவதை சோனியாகாந்தி ஏற்றுக் கொள்கிறாரா? இந்த வெட்கக்கேடான வார்த்தையை கூறியதற்காக சல்மான்குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

ஆனால், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என தெரிவித்தார் சல்மான் குர்ஷித். மேலும், நரேந்திரமோடியை 'ஆண்மை அற்றவர்' என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. குஜராத் கலவரம் தொடர்பாக அவரை விமர்சிக்க எனக்கு வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை' என விளக்கமளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி, சல்மான் குர்ஷித் கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். சல்மான் குர்ஷித் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் அவர் கூறியிருந்தார்.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சல்மான் குர்ஷித் விமர்சனம் குறித்துக் கூறுகையில், ‘மோடியை ஆண்மையற்றவர் என விமர்சித்த குர்ஷித் தான் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிப்பாரா?' என வினா எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்த போதும், இனி தொடர்ந்து மோடியை தான் அவ்வாறே அழைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் சல்மான் குர்ஷித்.

இது தொடர்பாக நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான பருக்காயத்தில் சல்மான் குர்ஷித் கூறியதாவது :-

நரேந்திர மோடி குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது தன் கடமையை செய்ய தவறி விட்டார். முதல்வர் பதவிக்குரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை.

கடமை செய்யாமல் தன் பொறுப்பில் இருந்து தோல்வி அடைந்தவரை ஆண்மையற்றவர் என்றுதான் சொல்வேன். அவரை வேறு எப்படி சொல்ல முடியும்? இன்று மட்டுமல்ல அவர் பற்றி பேசும் போதெல்லாம் நான் இப்படித்தான் சொல்வேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. சல்மான் குர்ஷித் செல்லும் ஊர்களில் பா.ஜ.க.வினர் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

English summary
Notwithstanding Rahul Gandhi's disapproval, Union minister Salman Khurshid on Saturday said he stood by his remark, in which he had dubbed Narendra Modi as "impotent" due to his "inability" to control riots. Khurshid said what other term could be used for a person like Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X