For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மன் பிசினஸ் பள்ளிகளுடன் இணைந்து சர்வதேச மேலாண்மை திட்டத்தை தொடங்கும் ஐஐம் பெங்களூரு!

ஜெர்மன் பிசினஸ் பள்ளி மற்றும் அந்நாட்டின் அலக்ஸாண்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெங்களூரு ஐஐம் ஐஎம்பிடி என்ற சர்வதேச மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெர்மன் பிசினஸ் பள்ளி மற்றும் அந்நாட்டின் அலக்ஸாண்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெங்களூரு ஐஐம் ஐஎம்பிடி என்ற சர்வதேச மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

புதிதாக தொடங்கப்படவுள்ள ஐஎம்பிடி கல்வி மையம் 3 மேலாண்மை பள்ளிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொழில்நுட்ப தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களுக்கு திறம்பட பதிலளிக்கப்படுகிறது.

IIM Bangalore partners with German B-schools to launch International Management Programme for Technologists

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளர்கள், ஆர் & டி தலைவர்கள், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டடக்கலை வல்லுநர்களுக்கு இந்த மேலாண்மை திட்டப் பயிற்சி இந்தியா மற்றும் ஐரோப்பாவில் நியூரம்பெர்க் மற்றும் பெங்களூரு நகரங்களில் தனித்தனியாக இரண்டு வாரம் நடத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் தொழில்நுட்பத்தில் புதுமை, தொழில்நுட்ப உந்துதலுக்கான வணிக மாதிரிகள், உள்ளுணர்வு மற்றும் தளம் வணிக மாதிரிகள் ஆகியவை ஆகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க www.iimb.ac.in/eep/impt என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல தகவல்களை அறிய 080 26993380 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஐஎம் பெங்களூரில் உள்ள ஐஐஎம் நிர்வாக கல்வித் திட்டத்தின் தலைவரான பேராசிரியர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது: "உலக வணிகத்திற்கான தேவையான தகுதிகளை வழங்க இந்திய மற்றும் ஜெர்மன் தொழில் நுட்ப அமைப்புகளின் முக்கிய அம்சங்களை ஐஎம்பிடி கொண்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள எர்லங்கன் நியூரம்பெர்க் பகுதி 4.0 தொழில் உற்பத்தியின் தோற்றம் ஆகும், மேலும் அதன் உற்பத்தி சிறப்பு அறியப்படுகிறது. பெங்களூர் ஒரு துடிப்பான தொழில்நுட்பத் தொடக்க சூழல் அமைப்பாக உள்ளது மற்றும் இது இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பரவலாக கருதப்படுகிறது என்றார். இந்த ஐஎம்பிடி சிறந்த கல்வி அறிஞர்கள் மற்றும் முன்னணி ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுள்ளது.

எர்லங்கன்-நியூரம்பர்க் பிரெடெரிக்-அலெக்சாண்டர் பல்கலைக்கழகத்தில் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் தலைவர் பேராசிரியர் டாக்டர் காத்ரின் எம் மோஸ்லின், பங்கேற்பாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நன்மைகளை புரிந்து கொள்ள ஐஎம்பிடி உதவுகிறது என்றார். இதன் மூலம் பொருளாதாரம், குறுக்கு-கலாச்சார மற்றும் புவியியல் ரீதியாக விநியோகிக்கப்பட்ட குழுக்களில் பணியாற்றுவதற்கு மேலாளர்களை அது தயார்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த ஐஎம்பிடியில் விவாதங்கள் உள்ளிட்ட பலவிதமான பயிற்சி முறைகள் பேராசிரியர்கள் மற்றும பிசினஸ் வல்லுநர்கள் அளிக்கப்படுகிறது, இதன் மூலம் வேகமாக மாறிவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வரவிருக்கும் கண்டுபிடிப்புகள் குறித்து பயன்பெறுபவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

English summary
IIM Bangalore partners with German B-schools to launch International Management Programme for Technologists.The Indian Institute of Management Bangalore (IIMB) has announced a partnership with two premier German B-schools – the Friedrich Alexander University of Erlangen-Nuremberg (FAU) and the Fraunhofer Institute for Integrated Circuits IIS, Germany for anInternational Management Programme for Technologists (IMPT), an innovative Executive Education Programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X