For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படித்து முடிப்பதற்குள் 1,010 மாணவர்களுக்கு வேலை: ஐஐடி காரக்பூர் சாதனை

By Siva
Google Oneindia Tamil News

IIT Kharagpur creates record, more than 1,000 students get jobs
கொல்கத்தா: காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் நடந்த முதல்கட்ட நேர்காணலிலேயே வேலை கிடைத்துள்ளது.

உள்நாடு தவிர வெளிநாட்டு நிறுவனங்களும் ஐஐடிகளில் படிக்கும் மாணவர்களை பணியமர்த்த அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. இந்நிலையில் ஐஐடி மாணவர்களை தேர்வு செய்ய கல்லூரி வளாகங்களில் பல்வேறு நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி வருகின்றன. டிசம்பர் மாதத்துடன் முடிந்த முதல்கட்ட நேர்காணலில் ஐஐடிகளிலேயே அதிகமாக மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் உள்ள ஐஐடியில் சுமார் 1,010 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதையடுத்து மும்பை ஐஐடியைச் சேர்ந்த 900 மாணவர்களுக்கும், டெல்லி ஐஐடி மாணவர்கள் 750 பேர் மற்றும் கான்பூர் ஐஐடி மாணவர்கள் 700 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதன் மூலம் வேலை வாங்குவதில் ஐஐடி காரக்பூர் சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 195 நிறுவனங்கள் ஐஐடிகளுக்கு வந்து மாணவர்களை தேர்வு செய்கிறது.

கூகுள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஷெல், டாய்ஷ் வங்கி, ஐடிசி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், ப்லிப்கார்ட் மற்றும் ஹவுசிங் டாட் காம் போன்ற துவக்க நிறுவனங்களும் மாணவர்களை பணியமர்த்தியுள்ளது.

English summary
IIT Kharagpur has set a record among all IITs with more than a thousand of its students securing cushy jobs in the first phase of campus placements, officials said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X