For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பெபோ'ன்னா யாருன்னு தெரியுமா...?

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நேபாள எல்லையில் வைத்து கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் இயக்க நிறுவனர் யாசின் பக்கலின் இமெயிலில் இருந்து பல முக்கிய சங்கேத வார்த்தைகளை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தீவிரவாத செயல்களைக் குறிப்பிடுவதற்கும், தீவிரவாதிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதற்கும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் குறிப்பிடுவதற்கும் இந்த சங்கேத வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

யாசின் பத்கல் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் இணை நிறுவனரான ரியாஸ் பத்கல் ஆகியோரின் இமெயில் முகவரிகளிலிருந்து இந்த தகவல்களை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

பத்தாரா சிங் மற்றும் எச்பகதூர்

பத்தாரா சிங் மற்றும் எச்பகதூர்

யாசின் பத்கலிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பிலிருந்து அவனது இமெயிலில் ஆய்வு செய்து பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அதில் பல சாட் மற்றும் மெயில்களை கண்டுபிடித்தனர்.

சங்கேத வார்த்தைகள்

சங்கேத வார்த்தைகள்

இந்த சாட் உரையாடல் மற்றும் மெயில்களில் சங்கேத வார்த்தைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை வைத்து அவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்துள்ளனர் அதிகாரிகள்.

பெபோன்னா .. யாசின் பத்கல்

பெபோன்னா .. யாசின் பத்கல்

நடிகை கரீனா கபூரை பெபோ என்ற செல்லப் பெயரில் அழைப்பார்கள். ஆனால் இந்தப் பெயரை யாசின் பத்கலுக்கு வைத்துள்ளனர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர்..

பத்தாரா - எச்பகதூர்

பத்தாரா - எச்பகதூர்

மேலும் [email protected] என்ற ஐடியில் ஒரு மெயில் உள்ளது. [email protected] என்பது இன்னொரு மெயில். இதில் பத்தாரா சிங் மெயிலானது, ரியாஸ் பத்கலின் மெயில் ஐடியாகும். எச்பகதூர், யாசினுடையது.

டிவிடி

டிவிடி

யாசினுடைய மெயில்களிலும், சாட்களிலும் உள்ள சங்கேத வார்த்தைகள் வித்தியாசமாக உள்ளன. குறிப்பாக ஏகே 47 துப்பாக்கியை டிவிடி என்று குறிப்பிட்டுள்ளனர். யாசினை பெபோ என்று அழைத்துள்லனர். நெவ் என்பது தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு வைக்கப்பட்ட பெயர். சிடி என்றால் பிஸ்டல், சிவி என்றால் வெடிகுண்டு, வாகு என்றால் அல் கொய்தா. என்எட் என்பது இன்ன்ஷா அல்லா என்பதைக் குறிக்கிறது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து சாட்டிங்

ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து சாட்டிங்

ஹைதராபாத்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் குறித்து சாட்டில் பேசியுள்ளதாக யாசின் கூறியுள்ளார். இந்த சாட்டிங்குகளில் ஈடுபடும்போது யாசினும், ரியாஸும் சங்கேத வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

English summary
Bebo' is not Bollywood actress Kareena Kapoor's pet name and 'DVD' is not the diskette to store data. The former is apparently the code name for Indian Mujahideen (IM) co-founder Iqbal Bhatkal, while the latter refers to the assault rifle AK 47.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X